என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Metro bus stop"
சென்னை:
சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. ரூ.100 கட்டணத்துடன் கூடிய அட்டையில் ரூ.50 கூடு தலாக செலுத்தி நாள் முழுவதும் செல்லும் வகையில் சுற்றுலா அட்டை வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திய பிறகு ரூ.50 திருப்பி அளிக்கப்படுகிறது. பயணிகள் பயணம் செய் வதற்கு ஏற்ப 6 வகையான கார்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கியவுடன் பஸ் ஏறி செல்வதற்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பயணிகளின் வசதி கருதி மெட்ரோ ரெயில் நிலையங்களின் அருகில் பஸ் நிறுத்தத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளில் மெட்ரோ ரெயில் நிறுவன மும், மாநகர போக்குவரத்து கழகமும் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் சில இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் அருகில் மாநகர பஸ் நிறுத் தங்கள் உள்ளன. அசோக் பில்லர், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டியே மாநகர பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதனால் இந்த இடங்களில் பயணிகள் மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கி பஸ்களில் பயணிப்பதும், பஸ் பயணிகள் மெட்ரோ ரெயிலில் செல்வதும் சுலபமாக உள்ளது.
ஆனால் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும், பஸ் நிறுத்தத்துக்கும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதேபோல் செனாய்நகர், வடபழனி மற்றும் அரும்பாக்கம் ஆகிய இடங்களிலும் மெட்ரோ ரெயில் நிலையமும், பஸ் நிலையமும் மிக தொலைவில் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் பயணிகள் சிரமத்தை சந்திப்பதால் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதை தவிர்க்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே அனைத்து மெட்ரோ ரெயில் நிலை யங்கள் அருகிலும் பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தங் களை அமைக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டு வருகிறது.
எல்.ஐ.சி., தேனாம் பேட்டை, நந்தனம், ராணுவ குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டி பஸ் நிறுத்தங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
வேலை காரணமாக தினமும் வந்து செல்லும் பயணிகளுக்கு இது பயனுள் ளதாக இருக்கும். அதன் மூலம் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கையும் உயரும் என்று கருதப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்