search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "metro rail maintenance"

    மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக கோயம்பேடு பணிமனையில் சூரியசக்தி மூலம் 410 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. #SolarPower #MetroRail
    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை நிர்வாக அலுவலகம் மற்றும் ரெயில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலுக்கு தேவைப்படும் மின்சாரம் தற்போது மின்சார வாரியத்திடம் இருந்து பெறப்படுகிறது. இதற்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகம் செலவு செய்கிறது. இதனை குறைக்க சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.

    தலைமை அலுவலகத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதன் பணிமனையில் ரூ.8 கோடி மதிப்பில் 10 ஆயிரம் சதுரஅடியில் சூரியசக்தி மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து ஒரு நாளைக்கு 5 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதனால் ஆண்டுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் வரை சேமிக்க முடியும்.

    இதில் ஏற்கனவே ஒரு பகுதி பணிகள் நிறைவுபெற்று 410 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு மாதத்துக்கு சுமார் 55 ஆயிரத்து 350 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதனால் ஆண்டுக்கு ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் செலவு குறையும். ஏற்கனவே திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ரெயில் நிலையங்களில் 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க சூரியசக்தி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன.

    இவற்றின் மூலம் மாதத்திற்கு 13,800 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், குளிர்சாதன வசதி, ரெயில் இயக்கத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.6.3 லட்சம் செலவு குறைகிறது.

    இந்த தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ×