search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mgr centinary festival"

    சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆங்கிலேயருக்கு பிறகு அதிக முறை ஜார்ஜ் கோட்டையை ஆண்ட கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆடம்பர விழா அல்ல; மக்களுக்கு பயனளிக்கும் விழா. அதிமுக அரசு மக்களுக்கான அரசு; மக்களுக்காக பாடுபடுகின்ற அரசு.

    யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது. குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்கி வருகிறோம்.

    அவர் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது ரூ.330 கோடி விவசாய கடனை ரத்து செய்தவர்.

    திரைத்துறையில் இருந்து வந்தவர்களில் முதல் அமைச்சராக மக்கள் ஏற்று கொண்டது எம்.ஜி.ஆரையே.  தமிழகத்தின் சத்துணவு திட்டத்தினை மத்திய அரசே பின்பற்றுவதற்கு எம்.ஜி.ஆர். காரணம்.

    எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர். தனது சொத்துகளை பொது நலத்திற்கு விட்டு சென்றவர்.

    நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னை முதலிடம் வகிக்கிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிந்து வருகிறார்கள்.



    சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும்.

    ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கி.மீ நீளமுள்ள மவுண்ட் - பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.

    எம்.ஜி.ஆர். என்ற சக்தி தோன்றியிருக்கா விட்டால் தமிழகத்தின் கதி நிர்க்கதியாகி இருக்கும். எம்.ஜி.ஆர். கட்சி அவரது படம் போன்று 100 நாட்களே இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை.

    எதிர்ப்புகளை எல்லாம் மீறி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவை நிறுத்த தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
    செம்மொழி மாநாட்டுக்காக தி.மு.க. செய்த 200 கோடி ரூபாய் செலவில் 10 சதவீதம் கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு நாங்கள் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #TNministerJayakumar #MKStalin #MGRcentenaryexpenses
    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நிறைவாக, சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று பிரமாண்ட விழா அரசு சார்பில் நடைபெற்று வருகிறது.

    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் என்ற முறையிலும்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழா அழைப்பிதழில் அவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பங்கேற்க மாட்டேன் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், 'மக்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலையெங்கும் பேனர்கள் வைத்தும், எதிர்க்கட்சிகளை வசைபாடும் விழாவாக அரசின் பெயரில் அரசியல் லாபத்துக்காக நடைபெற்று வரும் ‘எம்.ஜி.ஆர்’ நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை’ என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று நடைபெற்றுவரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், கடந்த 2010-ம் ஆண்டில் அவர்கள் ஆட்சியின்போது செம்மொழி மாநாட்டுக்காக தி.மு.க. செய்த 200 கோடி ரூபாய் செலவில் 10 சதவீதம் கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக நாங்கள் செய்யவில்லை என தெரிவித்தார். #TNministerJayakumar #MKStalin #MGRcentenaryexpenses
    ×