என் மலர்
முகப்பு » militantskilled
நீங்கள் தேடியது "militantskilled"
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது இன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எதிர் தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Kulgamencounter #militantskilled
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி அமர்நாத் யாத்திரைக்காக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளிலும், பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள சட்டர் பன் பகுதியில் உள்ளூர் போலீசார், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இன்று நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணியில் இருந்தபோது அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கு இடையில் தாக்குதல் நடந்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Kulgamencounter #militantskilled
×
X