search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister Surekha"

    • சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம் என அமைச்சர் சர்ச்சை கருத்து
    • சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை

    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

    கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.

    தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

    இதற்கிடையே, தெலுங்கானா மாநில அமைச்சரான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    தெலுங்கானா அமைச்சரின் இந்த கருத்துக்கு சமந்தா, நாகார்ஜுனா, நானி, அல்லு அர்ஜுன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.

    இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கெளரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வழக்கு தொடர்பான தகவலை பதிவு செய்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கோரிக்கை விடுத்த அமலா.
    • உண்மையே இல்லாமல் பேசியது வெட்கக்கேடானது.

    நடிகை அமலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு பெண் அமைச்சர் பேயாக மாறியது. தீய கற்பனைகளை குற்றச்சாட்டுகளாக கற்பனை செய்து வெளியிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    அமைச்சர் மேடம், என் கணவர் (நாகார்ஜூனா) பற்றி ஒரு துளிகூட வெட்கமோ உண்மையோ இல்லாமல் பேசியது வெட்கக்கேடானது.

    தலைவர்கள் தங்களை சாக்கடையில் தாழ்த்திக் கொண்டு குற்றவாளிகளைப் போல் நடந்து கொண்டால், நம் நாட்டின் கதி என்ன?" என்றார்.

    இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கோரிக்கை விடுத்த அமலா, "ராகுல்காந்திஜி, நீங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டால், தயவுசெய்து உங்கள் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தி, எனது குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டு உங்கள் அமைச்சரின் விஷமத்தனமான அறிக்கைகளைத் திரும்பப் பெறச் செய்யுங்கள்" என்று அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் அல்ல.
    • பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் மந்திரி அறிக்கை

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் பெண் மந்திரி கொண்டா சுரேகா. இவர் நேற்று பேட்டியளித்தார்.

    அப்போது நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமராவ் தான் காரணம் என கூறினார். இது தெலுங்கு திரை உலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவருடைய கருத்துக்கு நடிகைகள் சமந்தா, அமலா, நடிகர் நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். எங்கள் குடும்ப வாழ்க்கையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். அரசியலுக்கு எங்களை இழுக்க வேண்டாம் என தெரிவித்தனர்.

    இதேபோல் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மந்திரி சுரேகா தெரிவித்த கருத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

    24 மணி நேரத்திற்குள் பெண் மந்திரி மன்னிப்பு கேட்க தவறினால் அவதூறு வழக்கு மற்றும் தொடர்புடைய கிரிமினல் வழக்குகள் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தொடங்குவேன் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.

    இந்த நிலையில் சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் மந்திரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-


    கே.டி.ராமராவ் பெண்களை இழிவுபடுத்தும் மனப்பான்மையை கொண்டவர் என்பதே தனது கருத்துக்களின் நோக்கம். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்துவது நோக்கம் அல்ல.

    சமந்தா தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம், அவரது அபிமானம் மட்டுமல்ல அவர் பெண்களுக்கு முன்மாதிரியும் கூட.

    சமந்தா அல்லது அவரது ரசிகர்களும் என்னுடைய கருத்துக்களால் புண்பட்டிருந்தால் அந்த கருத்துக்களை திரும்ப பெறுகிறேன். வேறு விதமாக எனது கருத்தை நினைக்க வேண்டாம். என்னுடைய கருத்தை நிபந்தனை இன்றி வாபஸ் பெறுகிறேன்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×