search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Velu"

    • இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.
    • சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்ற அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது.

    கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர்.

    தொரடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கருணாபுரம் கிராமத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார்.

    அங்கு, உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    261 பேர் கொண்ட மருத்துவ குழு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைகளை தொடர்ந்து கண்காணிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்ற அரசு முழுவீச்சில் பணியாற்றி வருகிறது.

    இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உள்துறை செயலாளர், டிஜிபி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் தாய், தந்தையை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாரத்திற்கு உதவிகள் வழங்கப்படும்.

    நேற்று முதல் 132 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

    கள்ளச்சாராயம் எப்போதும் இருக்க கூடாது என்பது தான் அரசின் நோக்கம். கள்ளச்சாராயம் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த சம்பவத்திற்கு பிறகு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    உரிய விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பது உள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×