search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Misinformation"

    கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதற்கு தொண்டர்கள் பாகிஸ்தான் கொடியசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
    சமூக வலைதளமான ட்விட்டரில் விகாஸ் பான்டே என்பவர் பதிவிட்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவர் பகிர்ந்து இருக்கும் வீடியோவில் ஒரு குழுவினர் கைகளில் பச்சை நிற கொடிகளை அசைத்தப்படி ராகுல் காந்தி சிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

    வீடியோவுடன் “இல்லை, இது பாகிஸ்தான் கிடையாது, ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் காங்கிரஸ் சாக வேண்டும்!” என எழுதப்பட்டுள்ளது. இதே வீடியோ ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.



    இதே பதிவு ஃபேஸ்புக்கில் “தேர்தல் முடிவுகளுக்கு வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெற்றி இடம். ஒவ்வொரு இந்துவும் இதனை பார்க்க வேண்டும்” என்ற தலைப்பில் பகிரப்படுகிறது. ஒவ்வொரு தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ சமூக வலைதள வாசிகள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை பதிய வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

    இது உண்மை தானா?

    வீடியோ தலைப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று இது போலி தகவல் ஆகும். முதலில் இந்த வீடியோவில் காணப்படும் கொடி பாகிஸ்தான் நாட்டின் கொடி கிடையாது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடி ஆகும். இந்த கட்சி கேரளாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதுதவிர இந்த வீடியோ வயநாட்டில் எடுக்கப்படவில்லை. இது கேரளாவின் காசர்கோட் பகுதியில் எடுக்கப்பட்டதாகும்.

    புகைப்படம்: இடதுபுறம்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி வலதுபுறம் - பாகிஸ்தான் கொடி


    உண்மையில் போலி தலைப்பில் வேகமாக பரவி வரும் வீடியோவில் ரமேஷ் உன்னித்தனுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படுகிறது. இவர் காசர்கோட் பகுதியின் வேட்பாளர் ஆவார். இந்த வீடியோ காசர்கோட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாக்கு சேகரிப்பின் போது படமாக்கப்பட்டது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காசர்கோட் பகுதி பொது செயலாளர் எம்.சி. கமருதீன் தெரிவித்தார்.

    சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை போன்று இந்த வீடியோ ராகுல் காந்தி வெற்றிக்கு பின் வயநாட்டில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. மேலும் வீடியோவில் இருந்தது பாகிஸ்தான் நாட்டு கொடியும் கிடையாது.

    வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்..,




    ×