search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mission Impossible"

    • மிஷன்: இம்பாசிபிள் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.
    • மிஷன் இம்பாசிபிள் 8 திரைப்படம் அடுத்த ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகிறது.

    ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். அதுவும் டாம் குரூஸ் நடிப்பு மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.

    சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

    கடந்த ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து முந்தைய பாகம் உருவாக்கப்பட்டது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பாகத்தில் அவர் எந்த வித டூப் இல்லாமல் மலையில் இருந்து கீழே குதித்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது.

    இந்நிலையில், மிஷன் இம்பாஸிபிள் 8ம் பாகத்திற்கான டிரெய்லரை படக்குழுவும், படத்தின் நாயகன் டாம் குரூஸும் வெளியிட்டுள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்ஷன் மிகுந்த காட்சிகளால் டிரெய்லர் நிரம்பியுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு கீயை தேடி அவர் பயணம் செய்வார். இந்த பாகமும் அதை தேடியே கதைக்களம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், மிஷன்: இம்பாசிபிள் 8-ம் பாகத்திற்கான ஆக்சன் காட்சிகளில் டாம் குரூஸுக்கு டூப் போட்டு படமாக்கப்பட்டுள்ளது.

    62 வயதான டாம் குரூஸ் தனது சினிமா வாழ்க்கையில் முதன் முறையாக சண்டை காட்சிக்கு டூப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.
    • அடுத்த ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். அதுவும் டாம் குரூஸ் நடிப்பு மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.

    புகழ்பெற்ற மிஷன் இம்பாசிபிள் படத்தில் வரும் டாம் குரூஸின் கேரக்டர்தான் ஈதன் ஹண்ட். ஈதன் ஹண்ட் இந்த கேரக்டரை ஹாலிவுட் தாண்டி உலக ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள். சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.

    கடந்த ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து முந்தைய பாகம் உருவாக்கப்பட்டது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பாகத்தில் அவர் எந்த வித டூப் இல்லாமல் மலையில் இருந்து கீழே குதித்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது.

    இந்தநிலையில், 8ம் பாகத்திற்கான டிரெய்லரை படக்குழுவும், படத்தின் நாயகன் டாம் குரூஸும் வெளியிட்டுள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு மே 23-ம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூபில் இதுவரை 14 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    ஆக்ஷன் மிகுந்த காட்சிகளால் டிரெய்லர் நிரம்பியுள்ளது. முந்தைய பாகத்தில் ஒரு கீயை தேடி அவர் பயணம் செய்வார். இந்த பாகமும் அதை தேடியே கதைக்களம் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    கிறிஸ்டோபர் மிக்வாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மிஷன் இம்பாசிபிள்' படத்தின் விமர்சனம். #MissionImpossibleFalloutReview
    மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் நாயகன் டாம் க்ருசுக்கு ஒரு மிஷன் கொடுக்கப்படும். கடைசி பாகத்தில் தி சிண்டிகேட் அமைப்பின் தலைவனான சீன் ஹாரிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். இந்த பாகத்தில் அந்த சிண்டிகேட் குழுவில் இருந்து சிதறிக் கிடக்கும் அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்களை தி அபோஸ்டில்ஸ் என்று கூறிக் கொள்கின்றனர். 

    இவ்வாறு பிரிந்து கிடக்கும் அந்த அமைப்பினர் மூன்று சக்தி வாய்ந்த ப்ளூட்டோனியம் அணுகுண்டுகளை வாங்க திட்டமிடுகின்றனர். அந்த அணுகுண்டு அவர்களிடம் செல்லாதவாறு தடுக்க வேண்டும் என்பது டாம் மற்றும் அவரது குழுவுக்கு வழங்கப்படும் மிஷன். 



    டாம் குரூஸ் தனது குழுவுடன் அந்த ப்ளூடோனியம் அணுகுண்டை கைப்பற்றுகிறார். இதில் தனது நண்பனை காப்பாற்றுவதற்காக அணுகுண்டை தவறவிடுகிறார். இந்த நிலையில், சிஐஏ அமைப்பின் பார்வையில் டாம் க்ரூஸ் குற்றவாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார். இதற்கிடையே கடைசி பாகத்தில் கைது செய்யப்பட்ட சிண்டிகேட் அமைப்பின் தலைவனான சீன் ஹாரிஸை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பினர் நிபந்தனை வைக்கின்றனர். 

    தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், ப்ளூட்டோனியம் அணுகுண்டை வெடிக்க வைத்து விடுவதாக மிரட்டுகின்றனர். கடைசியில், டாம் க்ரூஸ் தனது குழுவுடன் எதிரிகளின் திட்டத்தை முறியடித்தாரா? சீன் ஹாரிஸ் விடுவிக்கப்பட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    டாம் க்ரூஸ் வழக்கம் போல் இந்த பாகத்திலும் தனது ஆக்‌ஷன், அதிரடி சண்டைக் காட்சிகளுடன் அதகளப்படுத்தி இருக்கிறார். இத்தனை வயதிலும் இளமையானவர் போல் அவர் செய்யும் சாகசங்கள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. சூப்பர் மேனாக அனைவரது இதயங்களை கவர்ந்த ஹென்றி கேவில் இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். சிமான் பெக் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

    மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் மிஷனை மேற்கொள்ளும் குழுவுக்கு கடைசியில் வெற்றி தான் கிடைக்கும். ஆனால் அந்த வெற்றியை எட்டிப் பறிப்பது என்பது எளிமையாக இருக்காது. பல்வேறு சாகசங்கள் மூலம் டாம் க்ரூஸ் தனது குழுவினருடன் வெற்றிக் கனியைப் பறிப்பார். அந்த வகையில் இந்த பாகத்தில் ஆங்காங்கு பழைய நியாபங்களை காட்டியிருப்பது உணர்ச்சிப்பூர்வமாக காட்டியும், ஆக்‌ஷன், அடுத்தடுத்த காட்சிகள் என ரசிக்கும்படியாக இயக்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் மிக்வாரி. மிஷன் இம்பாசிபிள் தீமுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.



    ஜோ க்ரேமர், கோமேல் ஷானின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ராப் ஹார்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. 

    மொத்தத்தில் `மிஷன் இம்பாசிபிள்' ஆக்‌ஷன் அதிரடி. #MissionImpossibleFalloutReview #TomCruise

    ×