search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monte Carlo Masters 2024"

    • களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சுமித் நாகல், 7-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) எதிர்கொண்டார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 93-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 7-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) எதிர்கொண்டார். நேற்று முன்தினம் 2-வது செட்டுடன் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த ஆட்டம் மறு நாளான நேற்று தொடர்ந்து நடந்தது. 2-வது செட்டை வசப்படுத்தி ஹோல்கருக்கு அதிர்ச்சி அளித்த சுமித் நாகல், கடைசி செட்டை தவற விட்டார்.

    2 மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஹோல்கர் ருனே 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை போராடி தோற்கடித்தார். 42 ஆண்டுக்கு பிறகு மான்டி கார்லோ டென்னிசில் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையோடு நாகல் வெளியேறினார்.

    3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரும், 2 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோ முசெட்டியை (இத்தாலி) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவர் 1 மணி 58 நிமிடம் எடுத்துகொண்டார்.

    ×