என் மலர்
நீங்கள் தேடியது "Nagore Hanifa"
- அரபுச் வார்த்தையான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று பொருளாகும்.
- ஹபீபி படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ஹபீபி'. அரபுச் வார்த்தையான ஹபீபிக்கு தமிழில் 'என்அன்பே' என்று பொருளாகும்.
இப்படத்தை அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இயக்குநர் கஸ்தூரிராஜா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஈஷா என்பவர் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக 'ஜோ' படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் 'ஹபீபி' திரைப்படத்தில், AI தொழில்நுட்பத்தில் நாகூர் ஹனிபா குரலில் பதிவு செய்யப்பட்டுள்ள பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஆ. ராசா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- “இசைமுரசு” ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்!
- இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது பாடல் குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.
திமுக தலைவiரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கழகத்தின் கம்பீரக் குரல் "இசைமுரசு" நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்!
தலைவர் கலைஞரின் நண்பரும் - ஆருயிர்ச் சகோதரருமான "இசைமுரசு" ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்! என்று தெரிவித்துள்ளார்.
கழகத்தின் கம்பீரக் குரல் "இசைமுரசு" நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்!தலைவர் கலைஞரின் நண்பரும் - ஆருயிர்ச் சகோதரருமான "இசைமுரசு" ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்!… pic.twitter.com/xJTxK6EgIt
— M.K.Stalin (@mkstalin) December 25, 2024
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலத்தில் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது பாடல் குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர் .எஸ். பாரதி,. டி.கே.எஸ் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, எஸ். ஆஸ்டின், தாயகம் கவி எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் சிற்றரசு, திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, யுகபாரதி, சுரேஷ் காமாட்சி, சி.எஸ். சாம், மீரா ஆகியோர் பங்கேற்றனர்.