search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nassau County International Cricket Ground"

    • ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்ட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
    • நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மாறியுள்ளது.

    அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது. ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டதை தவிர்த்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. இன்று  தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

     

    'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும்.

    இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதி முன்னேறும். வெஸ்ட் இண்டீசில் 6 மைதானங்களில் இறுதிப்போட்டி உள்பட 39 ஆட்டங்களும், அமெரிக்காவில் 3 மைதானங்களில் 16 ஆட்டங்களும் நடக்கின்றன. அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

     

    இந்த தொடரில் வரும் ஜூன் 9 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்ட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Nassau County International Cricket Stadium) வைத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மாறியுள்ளது.

    பனி மூடிய மைதானத்தை கடந்த பிப்ரவரி மாதம் புதுப்பிக்க ஆரம்பிக்கும்போது எடுத்த புகைப்படமும், மே மாத முடிவில் புதுப்பிக்கப்பட்டதற்கு பிந்தைய படமும் வெளியாகி இரண்டிலும் உள்ள வித்தியாசம் மலைக்க வைக்கக் கூடியதாக உள்ளது. இந்த மைதானத்தின் மதிப்பு ரூ.250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×