என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » new bridge project
நீங்கள் தேடியது "new bridge project"
ஏ.பள்ளிப்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஏ.பள்ளிப்பட்டியில் ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி ஏ.பள்ளிப்பட்டியில் புதிய பாலத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நபார்டு மற்றும் கிராமசாலைகள் கோட்ட பொறியாளர் செல்வநம்பி, உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், குருபிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு தாலுகா கரகதஅள்ளி கிராமத்தில் ரூ.68.78 லட்சம் மதிப்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தினை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் மலர்விழி புதிய தீயணைப்பு நிலைய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

×

X