என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » new foreign minister
நீங்கள் தேடியது "new foreign minister"
பிரெக்ஸிட் விவகாரத்தில் ராஜினாமா செய்த வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக புதிய மந்திரியாக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. #Brexit #BorisJohnson #JeremyHunt
லண்டன்:
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.
டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை மந்திரியாக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதார துறை மந்திரியாக பதவி வகித்து வந்த ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. #Brexit #BorisJohnson #JeremyHun
×

X