என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » new washermanpet
நீங்கள் தேடியது "New Washermanpet"
புதுவண்ணாரப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ். பெயிண்டர். இவரது மனைவி ராதிகா. இவர் களது 3 வயது மகள் மூனேஷி. நேற்று மாலை ராதிகா வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமி மூனேஷி சமையல் அறைக்குள் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் உள்ள நீரை எடுக்க முயன்றாள். அப்போது தலைகுப்புற தண்ணீருக்குள் விழுந்து விட்டாள்.
மகளை காணாததால் ராதிகா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறுமியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் திருந்தி வாழ்வதாக கூறிய பெண் கஞ்சா விற்றபோது போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவர் கஞ்சா விற்றதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாகவும் புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போன்ற போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 22-ந்தேதி குற்ற விசாரணை சட்டத்தின் கீழ் புதுவண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி முன்னிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளி பிரியாவிடம் சாந்தி 1 வருடம் திருந்தி வாழ்வதாக பிராமண பத்திரம் கொடுத்தார்.
இந்த நிலையில் சில மாதங்களே ஆன நிலையில் சாந்தி மீண்டும் கஞ்சா விற்றார். இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார்.
1 வருடத்தில் சாந்தி திருந்தி வாழ்ந்த நாட்கள் போக மீதமுள்ள 239 நாட்கள் அவரை சிறையில் அடைக்க வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா உத்தரவிட்டார். இதையடுத்து சாந்தி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

புதுவண்ணாரப்பேட்டையில் மதுகுடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட பாட்டியை பேரனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை புதுகுடியிருப்பில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கவின்குமார் (19).
கடந்த 6-ந் தேதி இரவு மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்தார். அப்போது மகாலிங்கத்தின் தாயார் சின்னப்பொண்ணு (96) தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கவின்குமார் அவரை அடித்து கீழே தள்ளினார்.
இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் மகாலிங்கம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி வழக்குபதிவு செய்து கவின் குமாரை கைது செய்தார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

×

X