search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Norwegian International Chess Series"

    • உலகின் இரண்டாம் நிலை வீரரும் சாம்பியனுமான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார்.
    • உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரக்ஞானந்தாவின் ஸ்பான்சருமான கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். கடந்த மே 30 ஆம் தேதி நடந்த 3-வது சுற்றில் வெள்ளைக் காய்களுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டு வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    இதைத்தொடர்ந்து கிளாசிக்கல் செஸ்ஸில் உலகின் இரண்டாம் நிலை வீரரும் சாம்பியனுமான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

    இந்நிலையில் இரண்டு உலக சாம்பியன்களை அனாயசமாக வென்றுகாட்டிய பிரக்ஞானந்தாவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரக்ஞானந்தாவின் ஸ்பான்சருமான கவுதம் அதானி தனது எக்ஸ் பக்கத்தில் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், "உலகின் நம்பர் 1 மற்றும் நபர் 2 செஸ் வீரர்களை வீழ்த்தி நார்வே செஸ் தொடரில் அபாரமான வெற்றியை பிரக்ஞானந்தா பெற்றுள்ளது வியக்கவைக்கிறது. வெறும் 18 வயதில் இதை நிகழ்த்திக்காட்டிய நீங்கள் இன்னும் பல சாதனைகளைப் படைப்பீர்கள்.. நமது மூர்வண தேசியக் கொடியை உலக அரங்கில் உயரத்தில் பறக்கச்செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    ×