search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Obstruction the field"

    ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்வதற்கு இடையூறாக இருந்ததால், ரன்அவுட் ஆன அமித் மிஸ்ரா மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். #IPL2019 #DCvSRH
    ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி 162 ரன்களை சேஸிங் செய்தது. கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ரிஷப் பந்த் அவுட்டானதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    கடைசி ஓவரை கலீல் அகமது வீசினார். மிஸ்ரா மற்றும் கீமோ பால் ஆகியோர் பேட்டிங் செய்தனர். 3 பந்தில் 2 ரன்கள் என்ற நிலையில் மிஸ்ரா பந்தை சந்தித்தார். அப்போது பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் சகாவிடம் சென்றது. உடனே எதிர்முனையில் இருந்த கீமோ பால் ரன் எடுக்க ஓடினார். அப்போது சகா ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். பந்து படாமல் கலீல் அகமது கைக்கு வந்தது.

    அவர் பந்தை எடுத்து அமித் மிஸ்ராவை ரன்அவுட் ஆக்க Non-Striker ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். அப்போது ஆடுகளத்தை பாதித்தூரம் மட்டுமே தாண்டிய மிஸ்ரா, திடீரென சற்று வளைந்து ஸ்டம்பை மறைக்கும் வண்ணம் ஓடினார். இதனால் மிஸ்ரா காலில் பந்து பட்டு விலகிச் சென்றது. இதனால் மிஸ்ரா ரன்அவுட் ஆகவில்லை. அவர் வளைந்து ஓடாமல் இருந்திருந்தால் கலீல் அகமது வீசய பந்து ஸ்டம்பை தாக்கியிருக்கும்.



    இதனால் ரிவியூ கேட்டனர். ரிவியூ-வில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. பின்னர் ரன்அவுட்டுக்கு நடுவரிடம் முறையிட்டனர். இதனால் 3-வது நடுவர் உதவியை நாடினர். அவர் அந்த காட்சியை பலமுறை பார்த்து, மிஸ்ரா பீல்டிங் செய்தவற்கு இடையூறாக இருந்தார் என்ற ரன்அவுட் வழங்கினார்.

    இதனால் ஐபிஎல் வரலாற்றில் இந்த முறையில் அவுட்டான 2-வது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். இதற்கு முன் 2013-ல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய யூசுப் பதான் புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக இந்த முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
    ×