என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » odisha cm naveen patnaik
நீங்கள் தேடியது "Odisha CM Naveen Patnaik"
பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று சந்தித்தார். #ChandrasekharRao #NaveenPatnaik
புவனேஷ்வர்:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது.
இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் யோசனை தெரிவித்தார்.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார்.
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், 3-வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். இதுதொடர்பாக அவர் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.
இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஒடிசாவிற்கு சென்றார். தலைநகர் புவனேஷ்வரில் ஒடிசா முதல் மந்திரியை நேரில் சந்தித்தார். அவருக்கு நினைவு பரிசு அளித்தார். அப்போது மூன்றாவது அணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உ.பி.யில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ChandrasekharRao #NaveenPatnaik
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில அரசு இன்று 5 கோடி ரூபாயை இன்று வழங்கியுள்ளது. #KeralalRain #Keralafloods #NaveenPatnaik
புவனேஷ்வர்:
கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.
மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.
இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் 5 கோடி ரூபாய் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, நவீன் பட்நாயக் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண நிதி அளிப்பது குறித்து பேசினார். மேலும், தேவைப்படும் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். #KeralalRain #Keralafloods ##NaveenPatnaik
ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான வேட்டையை வெற்றிகரமாக நடத்திய இரு மாவட்ட போலீசாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #OdishaMaoistoperation #Cashrewards
புவனேஸ்வர்:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒடிசாவில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் தொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது, போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்று சிறப்பாக செயலாற்றிய அம்மாவட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த நவீன் பட்நாயக் இரு மாவட்ட போலீசாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தார். #OdishaMaoistoperation #Cashrewards

×

X