என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "pakistan parliament election"
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் பாராளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் அங்கு 11 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 மாகாணசபை தொகுதிகள் என மொத்தம் 35 தொகுதிகள் காலியாகின.
இந்த தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810141128087778_1_pakistan00._L_styvpf.jpg)
பாகிஸ்தானில் நடந்த பொதுத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திக்கிற முதல் இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanByElection
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இவர் இஸ்லாமாபாத் எம்.பி. தொகுதி உள்பட 5 தொகுதிகளில் போட்டியிட்டு மூன்றில் வெற்றி பெற்றார்.
தேர்தல் தினத்தன்று இஸ்லாமாபாத் தொகுதியில் வாக்களித்த இம்ரான் கான் அனைவரும் பார்க்கும்படி பகிரங்கமாக தனது வாக்கை பதிவு செய்த போட்டோ மற்றும் வீடியோ அனைத்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டது.
தேர்தல் கமிஷனின் 4 உயரதிகாரிகள் கொண்ட அமர்விடம் பதில் அளிக்கும்படி இம்ரான் கானுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார்.
அதற்கு இம்ரான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் பாபர் அவான் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், இம்ரான்கான் வாக்குப்பதிவு செய்த போட்டோவும், வீடியோவும் அவரது அனுமதியின்றி எடுக்கப்பட்டது.
இம்ரான்கான் வாக்களித்த போது தொண்டர்களின் கூட்ட நெரிசலால் வாக்கை பதிவு செய்வதை மறைப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த திரை கீழே விழுந்துவிட்டது. எனவே பகிரங்கமாக வாக்களித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்பட்டிருந்தது.
ஆனால், அவரது பதிலை தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக பகிரங்கமாக வாக்களித்தற்காக இம்ரான்கான் மன்னிப்பு கேட்டு தனது கையொப்பத்துடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, தேர்தல் கமிஷனின் 4 உயரதிகாரிகள் கொண்ட அமர்வின் முன்னர் இம்ரான் கானின் கையொப்பத்துடன் கூடிய பிரமாண பத்திரத்தை அவரது வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, வெளிப்படையாக வாக்களிப்பது குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆறுமாத சிறை காவல் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #ImranKhanapology
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெக்ரிக்-இ -இன் சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் வருகிற 11-ந்தேதி அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் கைபர்- பக்துன்குவா மாகாணத்தில் இவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆட்சி நடத்தியது.
அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 72 மணி நேரம் உபயோகித்து இருப்பதாகவும் அதற்குரிய வாடகை கட்டணம் ரூ.2 கோடியே 17 லட்சம் செலுத்தவில்லை என்றும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பொறுப்புடமை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இம்ரான்கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
தேர்தல் பணியில் இருந்ததால் அவர் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் ஆஜரானார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 7-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக இம்ரான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
கைபர் பக்துன்குவா மாகாண முதல்-மந்திரியாக பெர்வேஷ்கட்டாக் பதவி வகித்தார். அவர் மற்றும் 4 பேர் இந்த வழக்கில் ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். #ImranKhan
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தெக்ரீக்-இர்-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் வருகிற 11-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார்.
இதைதொடர்ந்து அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றும் என மோடி நம்பிக்கை தெரிவித்தார். பாகிஸ்தானுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை அண்டை நாடான இந்தியா விரும்புவதாகவும், இரு நாடுகளும் புதிய உறவை தொடங்க விழைவதாகவும் கூறினார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807311015034618_1_imrankhanmodi._L_styvpf.jpg)
இம்ரான்கானின் வெற்றியை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடி இம்ரான்கானின் தேர்தல் வெற்றியை வரவேற்று வாழ்த்து தெரிவித்து இருப்பதை பாகிஸ்தான் அரசு வரவேற்றுள்ளது.
இந்தியாவின் அறிக்கை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக உள்ளது. இத்தகைய போக்கு மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் தரப்பு கருதுகிறது. #ImranKhan #Modi #Pakistan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-,இ- இன்சாப் கட்சி தலைவரான இம்ரான்கான் வெற்றி பெறுவார்.
எனவே இவரது கட்சியில் நிறைய பேர் சேர்ந்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்ற பின் மேலும் பலர் இணைவார்கள். ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் எனது அகில பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தனது நிலையில் இருந்து மாறி ஆட்சி அமைக்க உதவி செய்யும்.
என்னை பொறுத்த வரை பிரதமர் பதவிக்கு இம்ரான்கான் தகுதியானவர் ஆவார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் மரியம் நவாஸ் அரசியலில் முதிர்ச்சியற்றவர். இவரால் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு இம்ரான்கானை விட சிறப்பாக ஆட்சி நடத்த முடியாது.
இம்ரான்கானிடம் பல நல்ல தகுதிகள் உள்ளன. ஆசிப் சர்தாரி மற்றும் நவாஸ் செரீப்பைவிட இவர் சிறந்தவர் என கருதுகிறேன். பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் ஒரு உண்மையான மனிதர். மிக குறைந்த அளவே ஊழல் குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது. மேலும் இவர் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும். பேச்சை குறைக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து திரும்புவது குறித்து நான் இன்னும் முடிவு செய்ய வில்லை. பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க காத்திருக்கிறேன். எனவே நாடு (பாகிஸ்தான்) திரும்புவது குறித்து சில நாட்களில் முடிவெடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Musharraf #ImranKhan #pakistanelection