search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchavadi Anjaneya Temple"

    • நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அனைத்து கோவில்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோவிலில் விசேஷ பூஜைகளுடன் வண்ண வண்ண பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி  அனைத்து கோவில்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதன் ஒரு பகுதியாக பஞ்சவடியில் வலம்புரி மகாகணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சாமி அமைந்துள்ள இந்த கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோவிலில் விசேஷ பூஜைகளுடன் வண்ண வண்ண பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக மூலவர் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், தீபாரா தனை மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சியும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மோகினி அலங்காரம் நடைபெற்றது.

    வெங்கடாஜலபதி கோவில் முழுவதும் திராட்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பழத்தோட்டம் போன்ற அலங்காரம் பக்தர்களை கவர்ந்தது. தொடர்ந்து  5 மணிக்கு சொர்க்கவாசல் நடைதிறப்பு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் (சொர்க்கவாசல் வழியாக) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் 7 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ×