search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchayat elections"

    ஜம்மு காஷ்மீரில் இன்று 7-ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #JKPanchayatPolls #PanchayatElection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.



    341 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1798 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5575 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 2714 வாக்குச்சாவடிகள் (காஷ்மீர் 576, ஜம்மு 2138) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 892 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 912 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். #JKPanchayatPolls #PanchayatElection
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற ஆறாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 76.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.



    இதற்கிடையே, முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது.

    இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஆறாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில் 84.6 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 17.3 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 76.9 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவது கட்ட தேர்தலில் 75.2 சதவீதமும், நான்காவது கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், ஐந்தாம் கட்ட தேர்தலில் 71.1 சதவீதமும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம்.

    இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற ஐந்தாம் கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.



    இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில்  85.2 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 33.7 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 71.1 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவது கட்ட தேர்தலில் 75.2 சதவீதமும், நான்காவது கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம்.

    இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நான்காவது கட்ட பஞ்சாயத்து தேர்தலில் 71.3 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27, 29 மற்றும் டிசம்பர் 1, 4, 8, 11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது. ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 6 மாவட்டங்கள் என மொத்தம் 13 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நான்காவது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.



    இன்றைய நான்காம்கட்ட தேர்தலில் 99 கிராம தலைவர் பதவி மற்றும் 969 கவுன்சிலர் பதவிக்கான நபர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர். 

    மீதமுள்ள 339 கிராம தலைவர் பதவி மற்றும் 1,749 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 5,470 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க சுமார் 4.72 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றினர்.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில்  82.4 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 32.3 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 71.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும், 24ம் தேதி நடந்த மூன்றாவது கட்ட தேர்தலில் 75.2 சதவீதமும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம். இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஜம்முவில் 79.5 சதவீதமும், காஷ்மீரில் 64.5 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Kashmirpanchayatelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 
     
    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் இன்று தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு மக்களை வலியுறுத்தி வந்தனர்.

    காஷ்மீர் மற்றும் ஜம்மு வட்டாரங்களில் ஏற்கனவே 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1676 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 420 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1845 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 5585 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    காஷ்மீர் பகுதியில் 1303 வாக்குச்சாவடிகள், ஜம்முவில் 1993 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிற்பகலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    அதன்படி, ஜம்மு பகுதியில் 79.5 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 64.5 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #Kashmirpanchayatelection
    மேற்கு வங்காளம் மாநில உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பரவலாக வன்முறை சம்பவங்களால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட 568 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. #Panchayatelections #Repoll
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் துவங்குவதற்கு முன்பிருந்தே மாநிலத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. நேற்று முன்தினம் வாக்குப்பதிவின்போதும் வன்முறை தொடர்ந்தது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றியது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின. மாநிலம் முழுதும் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 43 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வன்முறை தொடர்பாக சுயேட்சை வேட்பாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார்களை அடுக்கினர். இதைத்தொடர்ந்து மறுவாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட  வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    அதன் அடிப்படையில், ஹூக்ளி மாவட்டத்தில் 10 வாக்குச்சாவடிகள், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் 28 வாக்குச்சாவடிகள், கூச் பெஹார் மாவட்டத்தில் 52 வாக்குச்சாவடிகள், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 63 வாக்குச்சாவடிகள், நாடியா மாவட்டத்தில் 60 வாக்குச்சாவடிகள், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 59 வாக்குச்சாவடிகள், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 26 வாக்குச்சாவடிகள், மால்டா மாவட்டத்தில் 55 வாக்குச்சாவடிகள், உத்தர் தினஜ்பூர் மாவட்டத்தில் 73 வாக்குச்சாவடிகள்  என மொத்தம் 568 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகள்  நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #Panchayatelections #Repoll
    மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் மற்றும் அவரது மனைவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. அம்மாநிலத்தின் தென் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கச்சராபாரி பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரையும் கலவரக்காரர்கள் எரித்துக் கொன்றுள்ளனர்.

    மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவபிரசாத் தாஸ் மற்றும் அவருடைய மனைவி உஷா ஆகியோர் எரித்து கொல்லப்பட்டதாக மாவட்ட மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஷமிக் லஹிரி தெரிவித்துள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


    ஷமிக் லஹிரியின் இந்த குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர், மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார். வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுந்தர்வன கடலோர காவல்துறை எஸ்.பி. தெரிவித்துள்ளார்.  #WestBengalPolls #PanchayatElections #WestBengalViolence
    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.#WestBengalPolls #panchayatelections
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengalPolls #panchayatelections
    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. #WestBengalPolls #panchayatelections
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

    621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #WestBengalPolls #panchayatelections
    மேற்கு வங்க மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #WestBengalPolls #panchayatelections

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. 621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அம்மாநிலத்தில் இருக்கும் 3,358 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 48,650 இடங்களில், 16,814 இடங்களிலும், 341 பஞ்சாயத்து சமிட்டிகளில் உள்ள 9,217 இடங்களில், 3,059 இடங்களிலும், 20 ஜில்லா பரிஷத்தில் உள்ள 825 இடங்களில், 203 இடங்களிலும் யாரும் போட்டியிடவில்லை. இதனால் அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இத்தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 46 ஆயிரம் மாநில போலீசார் மற்றும் 12 அயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். #WestBengalPolls #panchayatelections
    ×