search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paneer Stuffed Dosa"

    பன்னீரில் புலாவ், கிரேவி, பிரியாணி, பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பன்னீர் - 200 கிராம்
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கறிவேப்பில்லை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 1



    செய்முறை :

    பன்னீரை துருவிக் கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து குலையும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் கடைசியாக துருவிய பன்னீர் சேர்த்து கிளறவும்.

    இப்போது பன்னீர் பூரணம் தயார்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் வேக விடவும்.

    தோசை வெந்த பிறகு பன்னீர் பூரணத்தை தோசைக்கு நடுவில் வைத்து இரண்டாக மடக்கி எடுத்து பரிமாறவும்.

    சுவையான பன்னீர் தோசை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×