search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pashupatinath Temple"

    • நேபாளத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப் பெற்றது பசுபதிநாதர் கோவில்.
    • அங்கு புகைப்படம் எடுத்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்தது.

    காத்மண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்திப் பெற்ற பசுபதிநாத் கோவில், பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்தக் கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

    ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை இன்று தொடங்கியுள்ள சூழ்நிலையில், பசுபதிநாத் கோவில் நிர்வாகம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்தார். #Modi #PashupatinathTemple
    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜனக்புரியில் உள்ள சீதை கோயிலில் வழிபாடு செய்தார். இன்று காலை மஸ்ட்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சென்ற அவர் புத்த - இந்து மத சம்பிரதாயங்களின்படி முக்திநாதரை வணங்கினார்.



    பிற்பகல் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி, காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.

    நேபாளம் முன்னாள் பிரதமர் புஷ்பா கமால் தஹால் பிரச்சாந்தா-வை அவர் சந்தித்து பேசினார். காத்மாண்டு மாநகராட்சி சார்பில் இன்று மாலை அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் இன்றிரவு டெல்லி திரும்புகிறார். #Modi #PashupatinathTemple
    ×