search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Passport seva"

    உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார். #Passport #PassPortSeva
    வாஷிங்டன்:

    மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘பாஸ்போர்ட் சேவா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்தியாவில் உள்ள டேட்டா மையத்துடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு உள்ளன.

    இதனால், அங்கு பாஸ்போர்ட் வழங்கும் பணிகள் வேகமாக நடைபெறும். கடந்த வாரம், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், 48 மணிக்கும் குறைவான நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. விரைவில், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இது நடக்கப்போகிறது. இன்னும் சில மாதங்களில், புதிய வடிவமைப்பிலான பாஸ்போர்ட்டுகளை இந்திய அரசு வழங்கும்” என்று கூறினார். #PassPort
    பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவா மொபைல் செயலியை, 2 நாட்களில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். #PassportSeva #MEA #SushmaSwaraj
    புதுடெல்லி:

    புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, புதுப்பிக்க மற்றும் தொலைந்து போன பாஸ்போர்டுக்கு மாற்று பாஸ்போர்ட் பெறுவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் ‘பாஸ்போர்ட் சேவா’ புதிய செயலி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்துதல், நேர்முக தேதியை தேர்வு செய்வது ஆகியவற்றையும் இந்த செயலி மூலமாக எளிதாக செய்ய முடியும்.

    இந்நிலையில், 2 நாட்களில் ‘பாஸ்போர்ட் சேவா’ செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலி மெதுவாக இயங்குவதாக பலர் கம்மெண்ட் செய்திருந்தாலும், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×