search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people pays tribute"

    புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மவுன ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. #PulwamaAttack #Peoplepaytribute
    ஜம்மு:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.

    பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    இந்த தாக்குதல் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.

    உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    வீரர்களின் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வீரர்களின் இறுதி யாத்திரைக்காக சென்றுள்ளனர். #PulwamaAttack #Peoplepaytribute

    ×