என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » perumal viratham
நீங்கள் தேடியது "perumal viratham"
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். இந்த விரதங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். எனவே மற்ற தமிழ் மாதங்களுடன் ஒப்பிடுகையில் புரட்டாசி மாதத்தில்தான் நிறைய பேர் விரதம் மேற்கொள்வதுண்டு.
சித்தி விநாயக விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.
சஷ்டி – லலிதா விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.
அமுக்தாபரண விரதம் :
புரட்டாசி வளர்பிறை சப்தமியில, உமா – மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க, அருள் செய்யும். பிள்ளை – பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சவுபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பிடிக்காதே’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
தூர்வாஷ்டமி விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம்புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
மகாலட்சுமி விரதம் :
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம்பெறும்.
கபிலா சஷ்டி விரதம் :
புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. சித்திகளைத் தரும்.

அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும்.
வில்லிவாக்கத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் உள்ளது. புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.
திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், விரதம் இருந்து இங்குள்ள அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று.
அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார வடிசல்) குழந்தைகளுக்கு தானம் தருவது சிறப்பு.
மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம் இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து (காலை 6-7, 9-10, மாலை 5-6 மணிக்குள்) பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.

சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும்.
“காக்கும் கடவுள்” என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு பதினாறு திருநாமங்கள் உண்டு. அவை: விஷ்ணு, நாராயணன், கோவிந்தன், மதுசூதனன், ஜனார்த்தனன், பத்மநாபன், ப்ரஜாபதி, வராகன், சக்ரதாரி, வாமணன், மாதவன், நரசிம்மன், திரிவிக்ரமன், ரகுநாதன், ஜலசாயினன், ஸ்ரீதரன்.
பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை நாம் “பெருமாள்” என்று அழைக்கின்றோம். அவருக்காக கட்டிய கோவிலைப் “பெருமாள் கோவில்” என்று சொல்கின்றோம். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை நாம் அனுபவத்தில் காணலாம்.
இவ்வாறு பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரராகி நமக்கு 16 பேறுகளையும் வழங்கும் விஷ்ணுவை வருகிற வைகுண்ட வாசனுக்குரிய ஏகாதசித் திருநாளில் வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். மார்கழி மாதம் வரும் ஏகாதசிக்கு `உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு “வைகுண்ட ஏகாதசி” என்று பெயர்.
மாதங்களில் புனிதமானதாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதனால் தான் “மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள்.
“வைகுண்ட ஏகாதசி” என்று வரும்பொழுது சொர்க்க வாசலைத் திறப்பார்கள். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் தான் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் பெருகும்.
ரொக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சொர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா?. அந்த விழா இந்த மார்கழி மாதம் வருகின்றது. திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆலயத்தில் நுழைய லட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பர்.
அதேபோல் திருக்கோஷ்டியூர், திருப்பதி, உப்பிலியப்பன் கோவில், திருமோகூர் போன்ற சகல விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த கண்கொள்ளாக் காட்சியை நாம் கண்டு மகிழ்ந்தால் பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் உயரும்.
ஏகாதசியன்று அவல், வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் மதியமும் இரவும் பலகாரம் செய்தும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்கும் பொழுது, இறை தியானத்தையே மேற்கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னதாக நீராடி பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.
அகத்திக்கீரையும், நெல்லிக்காயும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். இந்த மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு அதன் மத்தியில் மஞ்சள் வண்ணப் பூ வைத்தால் மங்கலம் உண்டாகும். பூசணிப்பூவை வைத்து அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும். மஞ்சள் வண்ணப் பரங்கிப் பூவும் வைப்பர். கிருமிநாசினியாக சாணத்தின் மீது அதைப் பதித்து வைத்திருப்பர்.
இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து “ஓசோன்” என்ற காற்று மண்டலத்தில் உள்ள காற்று நம் மீது படுவதால் ஆரோக்கியம் மேம் படுகின்றது. திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாட்டை மேற்கொண்டால் திருமணம் கைகூடும். அதிகாலையில் இறைநாமத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து நலன்களும் நமக்குக் கிடைக்கும்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். வளர்ச்சியும் பெருகும். வருங்காலம் நலமாகும்.
விஷ்ணுவை வழிபட்டு, அவரது துணையாக விளங்கிச் செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியின் சன்னிதிக்குச் சென்று லட்சுமி வருகைப்பதிகம் பாடினால், இல்லம் தேடி லட்சுமி வந்து அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வழங்குவார். அஷ்ட லட்சுமியின் படத்தையும் விஷ்ணு லட்சுமியோடு இணைந்திருக்கும் படத்தையும் பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது.
எட்டுவகை லட்சுமியால் ஏராளமாக செல்வம்
கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயி லானவளே
வெற்றியுடன் நாங்கள் வாழ வேணும்ஆதி லட்சுமியே!
வட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்.
யானையிரு புறமும்நிற்கும் ஆரணங்கே
உனைத்துதித்தால்
காணுமொரு போகமெல்லாம் காசினியில்
கிடைக்குமென்பார்!
தேனிருக்கும் கவியுரைத்தேன் தேர்ந்த கஜ லட்சுமியே
வானிருக்கும் நிலவாகி வருவாய் இதுசமயம்!
அன்றைய தினம் அவல் நைவேத்தியம் செய்தால் ஆவல்கள் பூர்த்தியாகும். நமக்கு வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் அகன்று இனிய பலன் கிடைக்கும். வளர்ச்சியும் பெருமையும் வந்து சேரும். வாழ்க்கையில் சந்தோஷங்களை மட்டும் நாளும் சந்திக்கலாம்.

விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற தவறான கருத்து உள்ளது. இது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.
தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை.

புரட்டாசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கியமான விரதங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய சித்தி உண்டாகும்.
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12
முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.
அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும். பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.
ஜாதகரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக்டோபர் முதல் வாரம்) கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.
பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி விரத பூஜை இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது. இது, தமிழ் மாதங்களில் 6-வது மாதமாகும். இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.
புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.
இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.
புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்...
ஸித்தி விநாயக விரதம் - இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.
துர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.
மகாலட்சுமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.
அமுக்தாபரண விரதம் - புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.
ஜேஷ்டா விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.
சஷ்டி-லலிதா விரதம் - புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம் - புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்
தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று வர்ணிக்கப்படும் அந்தப் புருஷோத்தமனை புரட்டாசி மாதத்தில் புகழ்பாடி விரதம் இருந்து வழிபடுவோம். பொருள் வரவை நாம் பெறுவோம்.
வழிபாடுகள் தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது. நாளும் நல்ல பலன்கள் நடைபெறவும், விதியின் வலிமையை மாற்றவும், துன்பங்கள் விலகவும், மனம் அமைதி பெறவும் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறோம். முழு முதற்கடவுள் கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை எண்ணற்ற தெய்வங்களை வணங்கி வருகிறோம்.
அவற்றில் கிழமைக்கேற்ற வழிபாடு, வாரத்திற்கேற்ற வழிபாடு, திதிக்கேற்ற வழிபாடு, மாதத்திற்கேற்ற வழிபாடு, வருடத்திற்கு ஒருமுறை வழிபடும் வழிபாடு என்று எண்ணற்ற முறைகள் இருக்கின்றன. இவை நீங்கலாக முன்னோர் வழிபாடு என்பது நம் முன்னேற்றத்திற்கு முதற்படியாக அமைகின்றது. இத்தனை வழிபாடுகளுடன் குல தெய்வ வழிபாட்டையும் நாம் அன்றாடம் மேற்கொண்டால் வாழ்வில் வளமும் நலமும் வந்து சேரும்.
அந்த அடிப்படையில் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் புண்ணிய காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். பிறர் பொறாமைப்படும்படியும், திறமைக்கு மதிப்பு கொடுப்பவர்களாகவும் திகழ்வர். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற தாரக மந்திரத்தை வாழ்வில் ஏற்று நடப்பவர்களாகவும் இருப்பார்கள். போற்றுதலுக்குரிய மாதம், புனிதமான மாதம் புரட்டாசி என்பதை அறிந்துகொள்ளுங் கள்.
புரட்டாசி மாதம் என்றாலே பொன், பொருளை வழங்கும் புருஷோத்தமன் வழிபாடுதான் நினைவில் வரும். எல்லா சனிக்கிழமைகளைக் காட்டிலும் புண்ணிய மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தநாளில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டுவந்தால் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். ‘அவதார புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத்தமன்’ என்று அழைக் கிறார்கள்.
விஷ்ணு அவதாரங்களில் ராமாவதாரம் மிகவும் முக்கியமானது. காரணம் ராமன் ஒழுக்கம் தவறாமல், உத்தமனாக வாழ்ந்தது தான். ராமர் பட்டாபிஷேகப் படம் வைத்து அதன் முன்னிலையில் எத்தனையோ வீடுகளில், கோவில்களில் ராமாயணம் படிக்கின்றார்கள். ராமாயணம் படிப்பவர்கள் மற்றும் படிப்பவர்களின் இல்லங்களிலும், அந்த ராமகாதையைக் கேட்பவர்கள் இல்லங்களிலும் காரியத் தடைகள் அனைத்தும் அகலும். மண மாலை சூடவும், மழலைகள் பிறக்கவும், தொழில் சிறக்கவும், தொல்லைகள் தீரவும், கடன் அகலவும், தனம் பெருகவும் ராமாயணம் படிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வது நல்லது. அதிலும் பட்டாபிஷேகத்தன்று கலந்துகொண்டால் ராஜயோகத்தோடு வாழும் அமைப்பு கிடைக்கும்.
பூ மகளின் அருகிலிருக்கும் விஷ்ணுவை நோக்கி, புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஆலயம் சென்று வழிபாடு செய்து வந்தால் நாளும் நன்மைகள் நடைபெறும்.
திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமாள், அலர்மேலுமங்கைத் தாயார், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில், கூடலழகியப் பெருமாள் என சிறப்பு மிகுந்த எண்ணற்ற பெருமாள் கோவில்கள் இருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி வன்புகழ் நாராயண சுவாமி கோவில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்றநாராயணப் பெருமாள், அரியக்குடி திருவேங்கடமுடையான், கீழச்சிவல்பட்டி சுந்தரராஜப் பெருமாள், கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், செவ்வூர் ரோட்டுப் பெருமாள் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் என அவரவர்களுக்கு அருகில் இருக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வாழ்க்கையும், வருமானத்தையும் பெருக்கிக் கொள்ளுங்கள். தவிர புரட்டாசி சனிக் கிழமைகளில் அன்னதானம், வஸ்திர தானம், சொர்ண தானங்களை மேற்கொண்டால் மேலும் பல நல்ல பலன்களைப் பெறலாம்.
விஷ்ணு அலங்காரப் பிரியர் என்பதால், சனிக்கிழமைகளில் அவரை அலங்கரித்து அழகு பார்க்க வேண்டும். செந்தாமரை மலர் சூட்டி, பச்சைப் பட்டு அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது உகந்தது. அதே வேளையில் ராமதூதரான அனுமனுக்கும் விளக்கேற்றி, வடைமாலை அணிவித்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் துன்பங்கள், தடைகள் அகலும்.
தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று வர்ணிக்கப்படும் அந்தப் புருஷோத்தமனை புரட்டாசி மாதத்தில் புகழ்பாடி வழிபடுவோம். பொருள் வரவை நாம் பெறுவோம்.
புருஷோத்தமன் வழிபாடு நீங்கலாக.. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில், சிவாலயத்திற்குச் சென்று சனீஸ்வரர் சன்னிதியில் எள் தீபத்தை ஏற்றி, சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ‘சனி பகவானால் நெருங்க முடியாத தெய்வம்’ என்று விநாயகப் பெருமானையும், அனுமனையும் சொல்வார்கள். அவர்களை இடைவிடாது வழிபட்டு வந்தாலும் அற்புத பலன்கள் நமக்குக் கிடைக்கும். இந்த புரட்டாசி மாதம் ராமநாமத்தைச் சொல்லி நாளும் வழிபட்டால், ராமபிரானின் அருள் அதிகம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த விரதங்கள் என்னவென்று பார்க்கலாம்.
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.

அஜா ஏகாதசி அன்று எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
அஜா ஏகாதசியை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.
பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.
அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.
பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.
அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா, உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.
நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு . இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.
அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.
அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், ஓ பாண்டு புத்ரா, நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள், எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.
இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.

அவரவர் சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தெய்வங்களையும், விரத வழிபாடுகளையும் உருவகப்படுத்தி, அவற்றை பெரும் நம்பிக்கையுடனும் விதிகளுடனும் பின்பற்றியும் வருகிறோம்.
ந்து சமயத்தில் சைவம், வைணவம் என பல பிரிவுகளில், அவரவர் சூழல் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தெய்வங்களையும், விரத வழிபாடுகளையும் உருவகப்படுத்தி, அவற்றை பெரும் நம்பிக்கையுடனும் விதிகளுடனும் பின்பற்றியும் வருகிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில நியதிகளை வகுத்து வைத்துள்ளது ஆன்மிகம். அதன்படி வைணவத்தில் வணங்கப்படும் தெய்வமான பெருமாள், ‘பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம்’ எனும் ஐந்து நிலைகளைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
பரம்
மனிதர் காண முடியாத தேவலோகம் எனப்படும் பரம பதத்தில், முக்தி பெற்ற முக்தர்கள், கருடன், இந்திரன், நாரதர் போன்ற தேவாதி தேவர் களுக்கு மட்டுமே காட்சியளிக்கக் கூடிய அற்புத நிலைதான் ‘பரம்’ என்றழைக்கப்படும் முதல் நிலை. இந்த தெய்வீக தரிசனத்தை சாதாரண மனிதப்பிறவிகளாகிய நாம் காண முடியாது. இந்நிலையானது அண்டத்தின் வெளியே உற்பத்தியாகும் நீர் போன்று, நம் சிந்தனைக்கும் பார்வைக்கும் எட்டாமல் இருக்கக்கூடியது.
வியூகம்
கடவுளாகிய பெருமாள், உலகைக் காக்கும் தலைவனாக பாற்கடலில் ஆதிசேஷன் மீது, மனைவி லட்சுமியுடன் பள்ளி கொண்டிருக்கும் பரவச நிலையே இரண்டாம் நிலையான ‘வியூகம்’ எனப்படுவது. இந்த நிலையும் முன்னோர் களால் நமக்கு வழிவழியாக சொல்லப்பட்ட ஆதர்ச நிலை என்பதால், இதையும் நம்மால் காணவோ, வணங்கவோ முடியாது. இது எப்படி என்றால், அதிக நீர் தாகம் உள்ளவன், செல்ல முடியாத பெருங்கடல் போன்றதே என்பதால் நம்மால் எளிதில் அணுக முடியாது.
விபவம்
உலகில் அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட பகவான், பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதாக நமக்கு புராணங்கள் சொல்கின்றன. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், கிருஷ்ணன், பலராமன், கல்கி போன்ற இந்த அவதாரங்களின் போது பூமியில் பிறவியெடுத்தவர்கள் மட்டுமே, அவர்களைப் பற்றிய பெருமையை அறிந்து அவர்களை சேவிக்கும் பாக்கியம் பெறுவார்கள். அந்த நிலையே ‘விபவம்’ எனப்படும். இதையும் நாம் அனுபவிக்க இயலாது. இந்நிலை கடுமையான மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் போன்றது. தாகம் தணிக்க உதவாது.
அந்தர்யாமித்துவம்
‘பகவான் தூணிலும் இருப்பான்.. துரும்பிலும் இருப்பான்’ என்று சொன்ன பிரகலாதனைப் போல், காணும் எல்லா உயிர்களிலும் இறைவனை உணர்ந்து, தன்னிலும் உள்கலந்து நிற்கும் பெருமாளை மட்டுமே நினைத்து பற்றற்றவராக கடுந்தவம் செய்பவர்கள் ஞானியர்கள். அவர்கள் தங்கள் மனக்கண்ணால் கண்டு தரிசித்து ஆனந்திக்கும் நிலையே ‘அந்தர்யாமித்துவம்' எனப்படும் நான்காம் நிலை. அனைத்தும் அவனே என பசி, தாகம் துறந்து, பல ஆண்டுகள் தவத்தில் மூழ்கி, அவனுள் ஒன்றி அவனின் தரிசனத்தைக் கண்ட நம்மாழ்வார் போன்றவர்கள் மட்டுமே அனுபவிக்கும் உன்னத நிலை இது. நிலத்தடியில் உள்ள நீர் ஊற்றைக் கண்டுபிடித்து தாகம் தீர்க்கும் வழி போன்றது. இது சாதாரண மனிதர்களால் எட்ட முடியாத கடினமான நிலை.
அர்ச்சாவதாரம்
எளிதில் அணுகக்கூடிய யாவரும் கண்டு இன்புற்று தங்கள் இல்லங்களிலும், மனதிலும், ஆலயங்களிலும் நம் விருப்பத்திற்கு ஏற்ற உருவங்களில் அலங்காரங்களில் எழுந்தருளியிருப்பதுதான் அர்ச்சை அல்லது உருவ வழிபாடு எனப்படும் ‘அர்ச்சாவதாரம்’ நிலை. பக்தர்கள் ஆசைப்பட்டபடி காண்பதற்கு எளிமையாய், கண்ணுக்கு நிறைவாய் திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமாளின் அழகை ரசிக்கும் அருமையான நிலைதான் இது. நம் தாகத்தை தணிக்கும் தேங்கிய மடுநீர் போல, நம் ஆன்மிக தாகத்தைத் தணிக்கும் ஆபத்பாந்தவ நிலை. இது மற்ற நிலைகளைப் போல அல்லாமல் நாம் அறிய திருக்கோவில்களில் குடிகொண்டு நம் கண்ணுக்கும், மனதுக்கும் நெருக்கமாய் நாம் உணரும் தெய்வீக நிலை இதுவே என்கின்றனர் நமது முன்னோர்கள்
நிலை எப்படி இருப்பினும் நாம் நம்பிக்கையுடன் விரதம் இருந்து வணங்கும்போது பெருமாளும் நம் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து நமக்கு நல்வாழ்வைத் தருவார்.

×

X