search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pillayidukki amman"

    • பெரிய நாயகி அம்மை அங்கு தோன்றி ஆளுடைய பிள்ளையை இடுப்பில் கோவிலுக்கு எடுத்து வந்தார்.
    • அங்குள்ள விநாயகரின் பெயர் ஞானசம்பந்த விநாயகர்.

    திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின.

    ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி "அம்மா" என்று அழைத்தார்.

    அது கேட்டுப் பெரிய நாயகி அம்மை அங்கு தோன்றி ஆளுடைய பிள்ளையை இடுப்பில் கோவிலுக்கு எடுத்து வந்தார்.

    பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது.

    சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் "கூப்பிட்டான் குளம்" என்பர், அது இன்று "கேட்டான் குளம்" என்று வழங்குகிறது.

    அங்குள்ள விநாயகரின் பெயர் ஞானசம்பந்த விநாயகர்.

    ×