search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pipeline gas project"

    நாடுமுழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். #PMModi #CityGasDistributionProject
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நாடு முழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    சேலம்-கோவை நகர எரிவாயு விநியோக திட்டத்திற்கு டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டின் உள் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த திட்டம் முதல் படியாக விளங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 70 சதவீதம் மக்கள் பயன்பெற வாய்ப்பு உருவாகும்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க எரிசக்திக்கான தேவையும் உயர்கிறது. எனவே சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரிசக்தியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டு வரை 66 மாவட்டங்களில் மட்டும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இன்று அந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 400 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார். #PMModi #CityGasDistributionProject
    ×