என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Plan to kill"
- வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர்செய்ய திட்டம்.
- தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாகேந்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இதுவரை 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும், ரவுடிகளிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக, ரவுடி நாகேந்திரனை என்கவுன்ட்டரில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி, வேலூர் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரும்போது என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் தெரவித்துள்ளார்.
அதனால், உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தேசிய மனித உரிமை ஆணையத்தில் நாநே்திரன் மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.