என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Player-Veeranganais"
- தமிழகத்தில் இருந்து 6 பேர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள்.
- இந்திய அணி 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சமீபத்தில் முடிவடைந்தது. இதல் 117 பேர் கொணட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்றது. இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.
ஒலிம்பிக் முடிவடைந்ததை தொடர்ந்து பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. வருகிற 28-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது. 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 84 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. 52 வீரர்கள், 32 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய அணி வில் வித்தை, தடகளம், பேட்மின்டன், சைக்கிளிங், ஜூடோ, வலு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ உள்பட 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
தமிழகத்தில் இருந்து 6 பேர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். அதன் விவரம்:-
டி.மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), துளசிமதி, முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீசிவன், சிவராஜன் சோலைமலை (நால்வரும் பேட்மின்டன்), கஸ்தூரி ராஜாமணி (வலு தூக்குதல்)
29 வயதான தங்கவேலு மாரியப்பன் பாரா ஒலிம் பிக்கில் 2 பதக்கம் பெற்றுள்ளார். 2016 ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கமும், 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடை பெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். தொடர்ந்து 37-வது முறையாக பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் பதக்கம் பெறுவாரா? என்ற எதிர்பாரப்பு அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் மாரியப்பன் தங்கம் வென்று இருந்தார். மற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் முதல் முறையாக பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். இதில் துளசிமதி, மனிஷா, நித்யா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று இருக்கிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் 54 பேர் கொண்ட இந்திய அணி 9 விளையாட்டுகளில் பங்கேற்றது. இதில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் ஆகி மொத்தம் 19 பதக்கம் கிடைத்தது.
தற்போது அதைவிட கூடுதலாக பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பங்கேற்றவர்களில் 19 பேர் இந்த தடவை இடம் பெற்றுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்