search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "politicise deeply regrettable"

    கர்த்தார்பூர் பாதை அடிக்கல்நாட்டு விழாவில் இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீர் பிரச்சனையை மையப்படுத்தி பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. #PakistanPM #piousoccasion #IndiaMEA
    புதுடெல்லி:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான், நமக்குள் இருக்கும் ஒரே பிரச்சனை காஷ்மீர் பிரச்சனைதான். இதை தீர்ப்பதற்கு இருநாட்டிலும் சரியான தகுதி படைத்த தலைவர்கள் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சீக்கியர்களின் நீண்டகால கோரிக்கையான கர்த்தார்பூர் தனிப்பாதை அமைக்கும் பக்திசார்ந்த விழாவின்போது இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை குறிப்பிட்டு தேவையில்லாத வகையிலும், அரசியலாக்கும் முறையிலும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ள கருத்து எங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன் தங்கள் நாட்டில் இருந்து கட்டவிழ்த்து விடப்படும் எல்லைதாண்டிய பயங்ரவாதத்தை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான, நம்பகமான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம் எனவும்  வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanPM #piousoccasion #IndiaMEA 
    ×