என் மலர்
நீங்கள் தேடியது "ponmudi case"
- அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு.
- விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதில், குற்றம்சாட்டப்பட்ட சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். மூன்று பேர் ஆஜராகாததை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்றைய வழக்கு மீதான விசாரணை நீதிபதி முன் வந்தது. இதில், மேலும் ஒரு முக்கிய சாட்சி , பிறழ் சாட்சியமானது.
இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியம் ஆன நிலையில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.
- மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தீர்ப்பின் நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.
அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் இன்று கிடைக்கப்பெற்றதும், மூத்த வழக்கறிஞர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஆலோசனைக்கு பிறகு வரும் ஜனவரி 2ம் தேதி மேல்முறையீடு செய்யவுள்ளார்.