என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pragya killing
நீங்கள் தேடியது "pragya killing"
எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
போபால்:
மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று கூறியதன் மூலம் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் பணிகள் முடிந்தநிலையில், இது சிந்திக்க வேண்டிய நேரம். பிராயச்சித்தம் தேடும் செயலாக நான் மவுனம் அனுசரிக்கப்போகிறேன். கடுமையான விரதத்தை தொடங்கி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கொல்வதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சாத்வி பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.
பின்னர் இந்த கருத்து தொடர்பாக கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் சாத்வி பிரக்யா சிங் தாக்குர்
பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், 'நாதுராம் கோட்சே காந்தியின் உடலைத்தான் சுட்டுக் கொன்றார். ஆனால், நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை உள்ளிட்ட இந்தியாவின் ஆன்மாவை கொல்கின்றனர்’ என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
‘அனைத்து விதமான அதிகாரம் மற்றும் அரசியலுக்கு எல்லாம் உயர்வானவர் காந்தி. குறுகிய கண்ணோட்டத்துடனான அரசியல் ஆதாயங்களுக்கு இடமளிக்காமல் ராஜநீதிக்கு உட்பட்ட வகையில் கட்சியில் இருந்து நீக்க பாஜக தலைமை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்’ எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
×

X