என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pratyangira Devi"
- கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜையுடன் யாகம் தொடங்கியது.
- 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு கோ பூஜை நடந்தது.
சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லாத்தான்பாறையில் ஆதிபரஞ்சோதி சகலோக சபை கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று இரவு மகா பிரத்யங்கரா தேவி பூஜை, நரசிம்ம பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை கோவில் நிர்வாகி திருவேங்கட ஜோதபட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தினார். இதையொட்டி பிரத்யங்கராதேவி, நரசிம்ம சுவாமிகளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கணபதி பூஜை, மகாலட்சுமி பூஜையுடன் யாகம் தொடங்கியது. பின்னர் குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய காய்ந்த மிளகாய்கள், வெண் கடுகு, மாங்காய் ஆகியவை கொட்டப்பட்டு மந்திரங்கள் முழங்கப்பட்டன. இதையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரத்யங்கரா தேவிக்கு பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், உடுமலைபேட்டை சென்னை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் வேண்டுதல்களை பனை ஓலை மற்றும் காகிதத்தில் எழுதி யாககுண்டத்தில் போட்டு எலுமிச்சை பழங்களை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தியும் வழிபட்டனர்.
இந்த பூஜையில் வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் இணையம் வழியாக பங்கேற்றனர். முன்னதாக நேற்று காலை அங்குள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு பூஜையில் கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு கோ பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பசுக்களுக்கு அகத்திகீரை, தவிடு, மாட்டு தீவனங்கள் கொடுத்து வழிபட்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது.
- தீவினைகள் அடியோடு விலகும்
வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்து குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.
பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது. அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியன்று காலை நேரத்தில் மிளகாய் ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. எரியும் யாக குண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய்களை அர்ப்பணிக்கிறார்கள்.
எந்த விதமான நெடி, கமறல், காரம் போன்றவை இருக்காது என்பது அதிசயமான விஷயம். இந்த யாகத்தை நாம் நடத்தினாலும், மற்றவர்கள் நடத்தும்போது கலந்து கொண்டாலும் மரண பயம் நீங்கும். நோய்கள், துன்பங்கள், மன வேதனைகள், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள், செய்வினைக் கோளாறுகள் அனைத்தும் நீங்கி வாழ்வு சிறக்கும்.
இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.
- உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது.
- ஆண்டு தோறும் சித்திரை 1-ந்தேதி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.
தென் தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகரில் பிரமாண்டமான வடிவில் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
கேரளாவின் கட்டிடக்கலை வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தில் பிரத்தியங்கிரா தேவி மற்றும் கால பைரவருக்கு ஒரே கல்லில் ஆன 11 அடி உயரத்தில் தத்ரூபமான வடிவில் சிலை அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
ஆலயத்தின் மூலவராக மகா பிரத்தியங்கிராதேவி வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். பத்து கரங்களுடன் கூடிய விஸ்வரூப கோலத்தில் மகா கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆலய வளாகத்தில் தட்சிணாமூர்த்தி குரு மகாலிங்கேஸ்வரராக தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆகம விதிப்படி நிர்மாணம் செய்யப்பட்டுள்ள இவரை வணங்கினால் குழந்தைபேறு, தொழில் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
ஆலய வளாகத்தில் மங்கலம் தரும் சனீஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, வீரணார், சரபேஸ்வரர், பஞ்சமுக கணபதி, சூலினி துர்கா, சிம்ம கணபதி, நாகலிங்கம், முனீஸ்வரர், குருபகவான், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், காளி ஆகிய தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். சனிக்கிழமை தோறும் ஆலயத்தில் உள்ள மங்கலம் தரும் சனீஸ்வர பகவானுக்குச் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடக்கின்றன.
இவ்வாலயம் சாஸ்திரப்படி இயற்கையாகவே இடுகாடு, சுடுகாட்டுக்கு எதிரில் அமைந்துள்ளது கூடுதலான சிறப்பம்சமாகும். இங்குள்ள பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும், எதிரிகளின் சூழ்ச்சிகள் காணாமல் போய்விடும்.
ஏவல், பில்லி, சூனியம் போன்ற கெடுதல்கள் அண்டாது. அரசியலில் மேன்மை கிடைக்கும். அரசு வேலை, பதவி உயர்வு கிட்டும் என்பது ஐதீகமாகும்.
இங்குள்ள மகா கால பைரவரை வணங்கும் பக்தர்களுக்கு இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும். முன்னோர்களின் சாபம் நீங்கி, வாழ்வில் மேன்மை கிட்டும் என்பது ஐதீகமாகும். ஞாயிற்றுக் கிழமை தோறும் கால பைரவர், சரபேஸ்வரருக்கு ஹோமத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
மகா பிரத்தியங்கிரா தேவியை வியாழக்கிழமை காலை சந்தனக் காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும். வெள்ளிக்கிழமை அன்னையை தாமரை மலர் 'அணிவித்து சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும். மகா பிரத்தியங்கிரா தேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும். கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மாதம் தோறும் அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடி அமாவாசை, தைத்திருநாள், தை அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை 1-ந் தேதி அன்று மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் மக்கள் நோய், நொடியின்றி நலமாக வாழ வேண்டியும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து பசுமை வளம் சிறக்க வேண்டியும் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது. இதுபோன்றே மிளகாய் வற்றல் யாகம், பச்சை மிளகாய் யாகம், பாகற்காய் யாகம், எலுமிச்சை பழ யாகம் போன்ற சிறப்பு யாகங்கள் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கோரம்பள்ளம் அருகே அமைந்துள்ள இத்திருக்கோவிலுக்குச் செல்ல தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், கோரம்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ, கார், மினி பஸ், வசதி உள்ளது.
- மூட்டை, மூட்டையாக காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு யாகம் நடந்தது.
- பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை பகுதியில் ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி மகா பிரத்யங்கராதேவி பூஜை நேற்று நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அங்குள்ள கோசாலையில் வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கி கோ பூஜை நடந்தது. மேலும் ஆஞ்சநேயர், நாகர் சன்னதியிலும் பூஜை நடந்தது. பின்னர் மாலை 6 மணி அளவில் மகா பிரத்யங்கரா தேவி பூஜை நடைபெற்றது.
இதில் மூட்டை, மூட்டையாக காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓதப்பட்டு யாகம் நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, கோவை மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது.
- காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது.
கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில், ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடம் உள்ளது. அங்கு ஆடி அமாவாசையையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு பிரத்தியங்கரா தேவி யாகம் நடந்தது. இதனை, மடத்தின் நிர்வாகி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார்.
யாக குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு, அதில் நெய் மற்றும் பக்தர்கள் காணிக்கையாக அளித்த காய்ந்த மிளகாய்கள் கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் ஓத யாகம் நடந்தது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், கோவை, விருதுநகர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக மடத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகிற 50-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு அகத்தி கீரை வழங்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- மகா பிரத்யங்கிரா தேவி, காலபைரவருக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது.
- இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பில் மகாபிரத்தியங்கிராதேவி-மகா காலபைரவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆடிஅமாவாசையை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரத்யங்கிரா தேவி, காலபைரவர் ஹோமம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித் தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், கல்விவளம் சிறந்திடவும், திருமணவரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கு ஏற்ப அரசு வேலை கிடைத்திடவும், உலகை கடந்த காலங்களில் உலுக்கிய கொரோனா போன்ற கொடிய நோய்கள் இல்லாமல் முற்றிலுமாக ஒழிந்திடவும், நன்கு மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெறவும் வேண்டி 10 ஆயிரத்து 8 கிலோ பச்சை மிளகாய் மகா யாகம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமை தாங்கி யாகத்தை நடத்தினார். அப்போது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு யாககுண்டத்தில் குவியல், குவியலாக பச்சை மிளகாயை போட்டு வழிபட்டனர். பின்னர் மகா பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு மகா தீபாரதனையும் நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூட்டை மூட்டையாக. கொட்டப்பட்டு பூஜை நடைபெற்றது.
- மடத்தில் உள்ள கோசாலையில் பசுக்களுக்கு கோபூஜையும் நடைபெற்றது.
கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடம் உள்ளது. இங்கு ஆனிமாத அமாவாசையையொட்டி மகா பிரத்தியங்கராதேவி பூஜை நடந்தது. இதனை மடத்தின் நிர்வாகி திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் நடத்தினர்.
பூஜையில் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூட்டை மூட்டையாக. கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜை நடைபெற்றது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பலர் பங்கேற்றனர்.
முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக மடத்தில் உள்ள கோசாலையில் பசுக்களுக்கு கோபூஜையும் நடைபெற்றது.
யாகத்தில் பல்வேறு விதமான இனிப்பு பலகாரங்கள் போடப்பட்டது. பூஜைகளை கணேஷ்குமார் குருக்கள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இக்கோவிலில் அமாவாசை நாட்களில் நிகும்பலா மகா யாகம் நடைபெறுவது வழக்கம். பிரித்தியங்கராதேவிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் சாகம்பரி அலங்காரம் நடைபெறும்.
அதன்படி ஐப்பசி மாத செவ்வாய் கிழமையான இன்று ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக மற்றும் சாகம்பரி அலங்காரம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ஸ்ரீபைரவஸ்யோல்லஸத்
சூல ஸ்தூல கபால பாச டமரு
வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்யகுஹராம்
ஆரக்த நேத்ரத்ரயீம்
பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம்
ப்ரத்யங்கிராம் பாவயே
அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்தியங்கரா தேவி. இவளைத் துதிப்பவர்க்கு பகை, எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும். அஷ்டமி, அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்