என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Premalatha Vijayakant"
- தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன் நியமனம்.
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும்.
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராமநாதன் தேமுதிகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக செயல்பட்டு வந்த இராமநாதன்.
இவர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், இவர் மாவட்ட கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (23.03.2024) முதல் நீக்கப்படுகிறார்.
இவர்களுடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக பொறுப்பாளராக டி.வி.டி.செங்குட்டுவன். இவர் இன்று (23.03.2024) முதல் நியமனம் செய்யப்படுகிறார்.
இவருக்கு மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், வார்டு, ஊராட்சி, கிளை கழகம், கழக சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
- அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்திகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
முன்னதாக அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி இந்தியா கூட்டணி சார்பில் அமைதி பேரணி மற்றும் பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாண்டிச்சேரியில், 9 வயது சிறுமி இரண்டு நாட்களாகக் காணாமல் போன நிலையில், அந்தச் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு, சாக்கடையில் தூக்கி எறியப்பட்ட சம்பவம், நம் அனைவர் மனதையும் கலங்கச் செய்துள்ளது."
"மேலும் இந்தச் செயலைச் செய்தவர்கள் போதைக்கு அடிமையாகிய இளம் வயது மற்றும் வயது முதிர்ந்தவர்கள். கஞ்சா விற்பனை என்பது மிக மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இதனால் மனிதர்கள் மிருகங்களாக மாறக்கூடிய ஒரு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."
"எனவே யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பும் இல்லை. இந்த சம்பவம் மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தப் பாதகச் செயலை செய்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நிச்சயம் வழங்க வேண்டும். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு எங்களது வருத்தத்தையும், சிறுவயதிலேயே தன் உயிரை இழந்த சிறுமிக்கு, தே.மு.தி.க. சார்பாகக் கண்ணீர் மல்க அஞ்சலியையும் செலுத்துகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
- விஜயகாந்த்தின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.
- விஜயகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது மார்பில் அதிக அளவு சளி தேங்கியதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதில் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால், விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார் என பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு விவரித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், " தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்.
மருத்துவமனையில் சமூகமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வெளியில் மட்டுமே வதந்திகளால் பரபரப்பு நிலவி வருகிறது.
வதந்திகளால், திரையுலகமும், குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றோம்.
விரைவில் நல்ல செய்தி வரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- விஜயகாந்தின் உடல்நிலை 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லை.
- அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று (நவம்ர் 29) மட்டுமே இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் கடைசியாக வெளியான அறிக்கையில், "தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது," என குறிப்பிடப்பட்டு இருந்தது.
கேப்டன் விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக அறிக்கை வெளியானது முதல், திரைத்துறை பிரபலங்கள் துவங்கி அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பலத்தரப்பினரும் விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் நலமாக இருக்கிறார் என்றும் விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, அனைவரையும் சந்திப்பார் என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார். - திருமதி. பிரேமலதா விஜயகாந்த் pic.twitter.com/P9iHyO7hzG
— Vijayakant (@iVijayakant) November 29, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்