search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "premalatha vijayakath"

    • விமான நிலைய போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.
    • தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி செல்ல முற்பட்டார்.

    அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணி செல்ல முயன்றனர். பிரேமலதா வாகனத்திற்கு மட்டும் தான் பேரணி செல்ல அனுமதி அளித்த காவல்துறையினர் தேமுதிகவினரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

    காவல்துறையின் அனுமதியை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் காவல்துறையினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தேமுகதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    தேர்தல் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆலந்தூர் தாசில்தாரும், உதவி தேர்தல் அதிகாரியுமான துளசிராமன் விமான நிலைய போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து, பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பது உள்பட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தேமுதிக மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சந்தோஷ் குமார் உள்பட தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    ×