search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Premgi Amaren"

    அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் - பனுஸ்ரீ மேஹ்ரா - பிரேம்ஜி நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிம்பா' படத்தின் விமர்சனம். #Simba #SimbaReview #Bharath # BhanuSriMehra #Premgi
    வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பரத், பிரபல நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். போதைக்கு அடிமையான பரத்தின் தாத்தாவின் இறப்புக்கு பிறகு, பரத்தும் போதைக்கு அடிமையாகிறார். தனிவீட்டில் வசித்து வரும் இவர் யாருடனும் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை, தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில், பரத் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிறுக்கும் நாயகி பனுஸ்ரீ மேஹ்ரா, தனது நாயை பார்த்துக் கொள்ளும்படி விட்டுச் செல்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் பரத்துக்கு நாய், நாய் மாதிரி இல்லாமல் பிரேம்ஜியாக தெரிகிறது. இவர் பிரேம்ஜியுடன் பேசி நட்பாகிறார்.



    பனுஸ்ரீ மேஹ்ராவும் அடிக்கடி பரத் வீட்டிற்கு வந்து செல்ல பரத் பனுஸ்ரீ மீது காதல் வயப்படுகிறார். தனது காதலுக்கு உதவும்படி பரத், பிரேம்ஜியிடம் கேட்கிறார். இதுஒருபுறம் இருக்க பனுஸ்ரீயுடன் ஒன்றாக பணிபுரியும் ரமணாவும் பனுஸ்ரீயை காதலிக்கிறார்.

    இதில் யார் காதல் வெற்றி பெற்றது? பரத்துக்கு பிரேம்ஜியாக தோன்றும் நாய் அவரது காதலுக்கு உதவியதா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    இதுவரை இல்லாத ஒரு வித்தாயசமான கதாபாத்திரத்தில் பரத் நடித்திருக்கிறார். போதை ஆசாமியாகவே படம் முழுக்க வந்து போதைக்காரர்களின் உலகத்தை காட்டிச் செல்கிறார். பனுஸ்ரீ மேஹ்ரா அலட்டல் இல்லாமல் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் தலைப்பாக சிம்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள். காமெடியில் கலகலக்கியிருக்கும் பிரேம்ஜி, படத்தின் கதை ஓட்டத்திற்கு காரணமாகிறார். மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்கள்.

    போதைக்கு அடிமையான ஒருவரின் உலகம், அவரது பார்வை எப்படி இருக்கும் என்பதை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு கதையாக்கி இருக்கிறார் அரவிந்த் ஸ்ரீதர். படத்தில் நாயாக வரும் பிரேம்ஜியின் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். வித்தியாசமான முயற்சிக்காக இயக்குநருக்கு பாராட்டுக்கள். அச்சு விஜயனின் படத்தொகுப்பு படத்தை போதை உலகத்திற்கு கொண்டு செல்கிறது.



    விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

    மொத்தத்தில் `சிம்பா' நன்றியுள்ளது. #Simba #SimbaReview #Bharath # BhanuSriMehra #Premgi

    அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத் - பானு ஸ்ரீ மெஹ்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் `சிம்பா' படத்தின் முன்னோட்டம். #Simba #Bharath #BhanuSriMehra #PremgiAmaran
    மேஜிக் சேர் பிலிம்ஸ் சார்பில் கே.சிவனேஸ்வரன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சிம்பா'.

    பரத் - பானு ஸ்ரீ மெஹ்ரா நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், பவர்ஸ்டார் சீனிவாசன், சுவாமிநாதன், சுவாதி தீகித் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - சினு சித்தார்த், படத்தொகுப்பு - அச்சு விஜயன், கலை இயக்குநர் - வினோத் ராஜ்குமார் & அந்தோணி, சண்டைப்பயிற்சி - பில்லா ஜெகன், ஆடை வடிவமைப்பு - அசோக் குமார், தயாரிப்பாளர் - கே.சிவனேஸ்வரன், தயாரிப்பு நிறுவனம் - மேஜிக் சேர் பிலிம்ஸ், சினிரமா ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஸ்ரீதர்.



    படம் வருகிற ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சிம்பா டிரைலர்:

    ×