search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "professional study"

    • தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ் 1ல் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.
    • ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தொழிற்கல்வி பாடப்பிரிவு முடிவு.

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பிளஸ்-1, பிளஸ்-2 தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை உடனடியாக மூட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பிறப்பித்த உத்தரவில் 9 அரசு பள்ளி களில் பிளஸ்-1, பிளஸ்-2 தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூட வேண்டும். அவற்றில் மாணவர்களை சேர்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்கனவே மாணவர்களை சேர்த்திருந்தால் அந்த சேர்க்கையை ரத்து செய்து மாணவர்களை வேறு பாடப்பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில், குருவி குளம், தென்காசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம், புளியங்குடி, புல்லுக்காட்டு வலசை, கரிவலம் வந்த நல்லூர், திருமலாபுரம், ஆய்குடி ஆகிய பள்ளிகளில் அக்கவுண்டிங் மற்றும் ஆடிட்டிங், வேளாண்மை, அறிவியல், டெக்ஸ் டைல்ஸ் போன்ற தொழிற்பாடப் பிரிவுகள் மூடப்படுகின்றன.

    ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினாலும் இந்த கல்வி ஆண்டில் சிலர் ஓய்வு பெறுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் 11 தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளை மூட வேண்டும் என அம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கடிதம் அனுப்பி உள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டி அரசு பள்ளியில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு மூடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் 9-ம் வகுப்பில் அறிமுகம் செய்த தொழிற்பிரிவு பாடங்களையும் ரத்து செய்திருப்பதாக தகவல் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொழிற்கல்வியில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்பட்டன. அவற்றையும் ரத்து செய்துள்ளது.

    ×