search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puducherry Olympic Association"

    தேசிய அளவில் பதக்கம் வெல்லும் புதுவை விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்க வேண்டும் என்று புதுவை ஒலிம்பிக் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டம் காந்தி வீதியில் உள்ள ஒட்டல் செண்பகாவில் நடந்தது. ஒலிம்பிக் சங்க தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் வேல்முருகன், வாழ்நாள் தலைவர் பூங்காவனம், மூத்த துணை தலைவர் உதயகுமார், துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், ஜெயராஜ், பொருளாளர் சுப்ரமணி, இணை செயலாளர்கள் சூரியமூர்த்தி, ஸ்டாலின் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் ஊழியர்களுக்கு 8 மாத காலமாக சம்பளம் கொடுக்காமலும், அங்கீகாரம் பெற்றுள்ள விளையாட்டு சங்கங்களுக்கு 2012 முதல் நிதி ஏதும் கொடுக்காமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    பல ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பண பரிசு வழங்கப்படவில்லை. இதனை அரசு உடனே வழங்க வேண்டும்.

    புதிய விளையாட்டு சங்கங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுவை மாநில விளையாட்டு குழு மத்திடம் அங்கீகாரம் கோரியும் அங்கீகாரம் தராமல், அவர்களுக்கு வேண்டிய சங்கங்களுக்கு மட்டும் புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அங்கீகாரம் கொடுத்து உள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது.

    விளையாட்டின் மீது அக்கறையே செலுத்தாமல் விளையாட்டு சங்கங்களுக்கு சரியான நிதி கொடுக்காமல் அனுபவமிக்க உறுப்பினர் செயலாளரை கொண்ட புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதுடன் இது குறித்து முதல்-அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், புதுவை மாநில விளையாட்டு குழுமத்தின் துணை தலைவர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் மனு கொடுப்பது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    ×