என் மலர்
நீங்கள் தேடியது "Puducherry Student"
- மாணவர் ஜெகதீஷ், நடிகர் பாலா ஏழை கல்லூரி மாணவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய சம்பவத்தை கலை நயமிக்க ஒரு பொம்மையாக கடந்த மார்ச் 22-ந்தேதி உருவாக்கினார்.
- வில்லியனூர் தனியார் கல்லூரி விழாவிற்கு வந்த பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய பொம்மையை பெற்றார்.
புதுச்சேரி:
சின்னத்திரை வாயிலாக லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பாலா.
இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்துக்கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவனுக்கு புதிய மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கினார்.
இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனை ஒரு செய்தியாக கடந்து விடாமல் புதுச்சேரி சேலியமேடு கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் பொம்மையாக தயார் செய்தார்.
பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி, தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.
இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ், நடிகர் பாலா ஏழை கல்லூரி மாணவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய சம்பவத்தை கலை நயமிக்க ஒரு பொம்மையாக கடந்த மார்ச் 22-ந்தேதி உருவாக்கினார்.
இந்த பொம்மையை பாலாவுக்கு பரிசாக தர விரும்புவதாகவும் தான் சென்னைக்கு செல்ல இயலாது என்பதால் புதுச்சேரிக்கு பாலா எப்போது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் வில்லியனூர் தனியார் கல்லூரி விழாவிற்கு வந்த பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய பொம்மையை பெற்றார்.
இதற்கெல்லாம் நான் தகுதியானவனா என தெரியவில்லை. இருப்பினும் தம்பி உருவாக்கிய பொம்மையை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறேன். இதுவரை பெரிதாக உதவி எதுவும் செய்யவில்லை. இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
இவ்வாறு பாலா கூறினார்.
கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பல லட்சம் மக்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கேரள மக்களின் துன்பத்தில் பங்கு கொண்டு அவர்களுக்கு உதவி வழங்க நாடு முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

புதுவை புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஜெயசூர்யாவுக்கு அரசு மாதந்தோறும் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த நிதியில் இருந்து புதிதாக காது கேட்கும் கருவி வாங்க தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கேரள நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்தார்.
இதுகுறித்து ஜெயசூர்யா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மாணவர் ஜெயசூர்யா நேற்று மாலை தனது பெற்றோருடன் சட்டசபை வளாகத்துக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி அந்த மாணவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஜெயசூர்யாவின் தந்தை ஜெய அம்பி புதுவை கோர்ட்டில் இளநிலை எழுத்தராக உள்ளார். தாயார் ஸ்ரீவள்ளி வக்கீலாக உள்ளார்.






