search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "punjab province"

    • 1996-ல் இருந்து மறைந்த பின்லேடனின் நெருங்கிய உதவியாளராக இருந்துள்ளார்.
    • பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு துறையின் அதிகாரிகள், அல்-கொய்தா நிறுவன தலைவரான பின்லேடனின் நெருங்கிய உதவியாளரும், அந்த இயக்கத்தின் மூத்த தலைவருமான அமின் உல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

    புலனாய்வு அடிப்படையிலான தேடுதல் வேட்டையில் பயங்கரவாதியான அமின் உல் ஹக் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டிருந்தது முறியடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட அமின் உல் ஹக்கை, பஞ்சாப் மாகாணம் குஜராத் மாவட்டத்தில் உள்ள சராய் அலாம்கிர் நகரில் இருந்து காவலில் எடுத்துள்ளோம் என பயங்கரவாத தடுப்பு துறையின் டிஐஜி உஸ்மான் அக்ரம் கொனதல் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் போலீசின் பயங்கரவாத தடுப்பு துறையின் செய்தி தொடர்பாளர் "அமின் உல் ஹக் கைது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் முக்கியமான திருப்புமுனை" எனத் தெரிவித்துள்ளார்.

    முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து பஞ்சாப் மாகாணத்தில் சதி செயல்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இவர் 1996-ல் இருந்து பின்லேடனின் நெருங்கிய உதவியாளராக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர்.

    கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள அப்போதாபாத்தில் அமெரிக்கா நடத்திய வேட்டையில் மறைந்து இருந்த பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    அமின் உல் ஹக் 2021-ல் ஆப்கானிஸ்தானில் காணப்பட்டதாகவும் அவரிடம் பாகிஸ்தான் ஐடி கார்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது. #Jaishheadquarters #Pakgovttakescontrol
    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் மீது எந்த நடவடிக்கை எடுக்காததுடன், இந்தியா மீதான தாக்குதல்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது.

    லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹவல்பூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் மாகாண அரசு கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாத் சவுத்ரி இன்று இரவு தெரிவித்துள்ளார். #Jaishheadquarters #Pakgovttakescontrol
    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உஸ்மான் பஸ்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #UsmanBuzdar
    லாகூர்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, கூடுதல் இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அந்தக் கட்சி பாகிஸ்தானில் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

    இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உஸ்மான் பஸ்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மொத்தமுள்ள 371 வாக்குகளில் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த உஸ்மான் பஸ்தாருக்கு ஆதரவாக 186 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட நவாஸ் ஷரீப் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஹம்சா ஷெபாசுக்கு ஆதரவாக 159 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரியாக உஸ்மான் பஸ்தார் விரைவில் பதவியேற்க உள்ளார். #UsmanBuzdar
    பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி மத்தியிலும் ஆட்சியை பிடிக்கும் என்னும் நிலையில், இம்ரான் கான் பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ம் தேதி (புதன் கிழமை) அன்று பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இவற்றுள் 272 தொகுதிகளில் பொது வேட்பாளர்களுக்கான வாக்கெடுப்பும், மீதமுள்ள தொகுதிகளில் 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், 60 தொகுதிகள் பெண்களுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரத்து 407 பேர். இதில் 5 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரத்து 262 ஆண் வாக்காளர்களும்,  4 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 145 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.



    பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் 272 தொகுதிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலுக்காக அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், 272 தொகுதிகளில் 141 தொகுதிகள் அதாவது பாதிக்கும் மேலான தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. பாகிஸ்தான் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 140 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 110 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே கூட்டணி ஆட்சியேனும் அமைக்க முடியும்.



    கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதையடுத்து, நவாஸ் ஷரிப் ஊழல் வழக்கில் கைதாகி தற்போது சிறைவாசம் அனுபவித்து வருவதால், அவர் மீதும் அவரது கட்சி மீதும் இருந்த செல்வாக்sகு குறைந்தது.

    இந்நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட 4 மாகாணங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் வெற்றி பெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்துவருகிறது.

    அதன் அடிப்படையில், ஏற்கனவே கைபர் பக்துங்கா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் தெஹ்ரீக் இ இன்சாப் பஞ்சாப் மாகாணத்திலும் வெற்றி பெறும் சூழல் இருப்பதால், மத்தியிலும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. #PakistanGeneralPolls #ImranKhan
    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PakistanGunbattle

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். 

    பாதுகாப்பு படையினர் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 பேர் தப்பியோடி விட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    கொல்லப்பட்ட அனைவருக்கும் கடந்த ஆண்டு பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி அலுவலகம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanGunbattle #tamilnews 
    ×