என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rajasthan CM"
- திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
- பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது.
இதையடுத்து புதிய முதல் மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பஜன்லால் சர்மா புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை முதல்-மந்திரியாக திவ்யா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா இன்று ஜெய்ப்பூரில் வரலாற்று சிறப்பு மிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் பஜன்லால் சர்மா ராஜஸ்தான் மாநில புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் திவ்யா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றனர். மேலும், கோவா முதல்வர் பிரமோத் சவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சஹா, மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட பஜன்லால் சர்மா சங்கேனர் தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 48,081 வாக்குகள் வித்தியாசததில் தோற்கடித்தவர்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் நீண்ட காலமாக பணியாற்றிவர். ராஜஸ்தான் மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே முதல்-மந்திரி பதவி அவரை தேடி வந்துள்ளது. பஜன்லால் சர்மா ராஜஸ்தான் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றான பத்பூரை பூர்வீகமாக கொண்டவர். அரசியல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்.
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குஜராத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா? என பிரதமர் நரேந்திர மோடி பயந்தார். அதற்கு தீர்வாக ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை நிறுத்தலாம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா யோசனை கூறினார். இதனால் ஜனாதிபதி பதவிக்கு தகுதியான அத்வானியை அவர்கள் ஒதுக்கி விட்டனர். இது பா.ஜ.க.வின் உட்கட்சி விவகாரம். ஒரு கட்டுரையில் படித்ததை கூறுகிறேன்” என்றார்.
இதனிடையே அசோக் கெலாட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “ஜனாதிபதி நியமனம் குறித்த தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளது. நான் ஜனாதிபதி பதவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ராம்நாத் கோவிந்தின் எளிமை, பெருந்தன்மை என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பேச்சு சர்ச்சையானதால் அசோக் கெலாட் பல்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தலித் என்பதால் அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து பாஜகவுக்கு கவலை ஏற்பட்டதாகவும், அப்போது தலித் வாக்குகளை கவனத்தில் கொண்டு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கியதாகவும் கெலாட் கூறினார். இந்த தகவலை ஒரு கட்டுரையில் படித்ததாகவும் அவர் கூறினார்.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றது.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரியாக அசோக் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட் மற்றும் இதர மந்திரிகளும் பொறுப்பேற்றனர்.
ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஆல்பர்ட் அரங்கத்தில் இன்று காலை சுமார் 10 மணியளவில் நடைபெற்ற விழாவில் அம்மாநில கவர்னர் கல்யாண் சிங் பதவி பிரமாணமும், காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, காங்கிரஸ் தலைவர் ஜித்தின் பிரசாத், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #AshokGehlot #RajasthanCM
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதற்கான தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு ராஜஸ்தான் பா.ஜனதா முதல்-மந்திரி வசுந்தராராஜே, “கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதே மோடியின் குறிக்கோளாக இருக்கிறது. இதன்படி கிராமப்புற விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
வசுந்தராராஜே தேர்தல் தேதி தெரிவிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு இலவச மின்சார திட்டத்தை வெளியிட்டார். தேர்தல் தேதி 3 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அவர் 2 மணிக்கு இதை தெரிவித்தார். 12 லட்சம் விவசாயிகள் பயன் அளிக்கும் வகையில் இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அங்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.
மக்களின் அதிருப்தியை சமாளிக்க முதல்-மந்திரி வசுந்தரா கடைசி நேரத்தில் இலவச திட்டங்களை அறிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். #BJP #VasundharaRaje
ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அசோக் கெலாட் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தனது சொந்த அரசியல் லாபத்துக்காக அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துகிறார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தன்மேகுமால் முதல்-மந்திரியின் முதன்மை செயலாளராக இருக்கிறார். இவரை அரசு அதிகாரி போன்று நடத்தாமல் தனிப்பட்ட முறையில் தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக முதல்-மந்திரி வசுந்தரா ராஜே ஹெலிகாப்டரில் சுற்றி வருகிறார். அதே நேரத்தில் தன்மேகுமார் ஒரு முதல்- மந்திரி போன்று செயல்படுகிறார். அரசின் அனைத்து முடிவுகளும் அவரது உத்தரவுப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ். மற்றும் அரசு உயர் அதிகாரிகளை மிரட்ட அவரை வசுந்தரா பயன்படுத்தி வருகிறார்.
அதே நேரத்தில் பணத்தை வீணடிக்கும் நிகழ்ச்சி அல்லது விழா ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காத நேர்மையான அதிகாரிகள் குறிவைத்து பழிவாங்கப்படுகின்றனர்.
கடந்த மாதம் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் மனித சங்கிலி நடத்தப்பட்டது. அதற்காக ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் கொட்டப்பட்டன. அதற்காக ரூ.21 கோடி செலவிடப்பட்டது. அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதேசன் சேத்தி மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று பல அதிகாரிகள் இடமாற்றத்துக்கு ஆளாகி வருகின்றனர் என்றார். #Congress #BJP #RajasthanCM #vasundharaRaje
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்