search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramkumar Ganeshan"

    கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி - பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `எல்கேஜி' படத்தின் முன்னோட்டம். #LKG #RJBalaji #PriyaAnand
    வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `எல்கேஜி'.

    ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - விது அய்யணா, படத்தொகுப்பு - அந்தோணி, கலை இயக்குனர் - டி.பாலசுப்ரமணியன், சண்டைப்பயிற்சி - சில்வா, பாடல்கள் - பா.விஜய், விக்னேஷ் சிவன், ஆடை வடிவமைப்பாளர் - பல்லவி சிங், திவ்யா நாகராஜன், தயாரிப்பு நிர்வாகம் - கே.எஸ்.மயில்வாகனம், ஒலி வடிவமைப்பாளர் - டி.உதயகுமார், தயாரிப்பாளர் - டாக்டர் ஐசரி கே.கணேஷ், எழுத்து - ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நண்பர்கள், இயக்கம் - கே.ஆர்.பிரபு



    படம் பற்றி பிரியா ஆனந்த் பேசும் போது,

    இந்த படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அனைத்திற்கும் பாலாஜி தான் காரணம். இது வெறும் காமெடி படம் மட்டும் அல்ல, நல்ல எண்டர்டெய்னர் படமாக இது இருக்கும்.

    பணியிடங்களில் பெண்கள் எப்படி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனது கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி, ஒரு மரியாதைக்குரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் என்றார்.

    எல்கேஜி வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 

    எல்கேஜி டிரைலர்:

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Prabhu
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் பிரபு, நடிகர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Prabhu

    ×