search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refers issue"

    முன்ஜாமீன் தொடர்பாக முரண்பட்ட தீர்ப்புகள் வந்து உள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை அரசியல் சாசன அமர்வு அமைத்து விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SupremCourt #Bail
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவருக்கு செசன்ஸ் கோர்ட்டு, ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்குகின்றன.

    இந்த முன் ஜாமீன் என்பது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புகள், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன.

    முன்ஜாமீன் என்பது குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கக்கூடாது, வழக்கு விசாரணை முடிகிறவரையில் நீடிக்க வேண்டும் என்று சில தீர்ப்புகள் சொல்கின்றன.

    இன்னும் சில தீர்ப்புகள், முன் ஜாமீன் என்பது குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டும்தான் வழங்கப்பட வேண்டும், அதன்பின் சம்பந்தப்பட்ட நபர், கோர்ட்டில் சரண் அடைந்து முறையான ஜாமீன் பெற வேண்டும் என்று கூறுகின்றன.

    இந்த நிலையில் முன் ஜாமீன் தொடர்பான ஒரு வழக்கை நீதிபதிகள் குரியன் ஜோசப், மோகன் சாந்தன கவுடர், நவீன் சின்கா ஆகியோரை கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

    அப்போது முன்ஜாமீன் தொடர்பாக முரண்பட்ட தீர்ப்புகள் வந்து உள்ள நிலையில், இது தொடர்பான விசாரணையை அரசியல் சாசன அமர்வு அமைத்து விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    ×