search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rejects petition"

    ஆதாயம் பெறும் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேர் தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதன்மூலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது. #AAP #PresidentKovind #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 27 எம்.எல்.ஏ.க்கள் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் நோயாளிகள் நலக் கமிட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தனர். இவ்வாறு ஆதாயம் பெறும் இரட்டை பதவிகளை வகித்து வரும் அவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.



    இந்த மனுக்களை அவர் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தார். அவற்றை பரிசீலித்த தேர்தல் கமிஷன், அந்த மனுக்களை விசாரிப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை எனக்கூறி நிராகரித்தது. பின்னர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் தேர்தல் கமிஷன் சில பரிந்துரைகளை வழங்கியது.

    இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். இதற்கான உத்தரவில் அவர் சமீபத்தில் கையெழுத்து போட்டார். இதன்மூலம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 27 பேரின் பதவி தப்பியிருக்கிறது.

    முன்னதாக நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தேர்தல் கமிஷன் தகுதிநீக்கம் செய்ததும், அதை ஐகோர்ட்டு ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது. 
    ×