search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "remove video links"

    இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்கவேண்டும் என யூ டியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #Abhinandhan #Youtube
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது.

    இந்த தாக்குதலின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்தது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. அதில் அவர் காயங்களிடன் தோற்றம் அளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இந்த வீடியோ உலகம் முழுவதிலும் சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் வைரலாக பரவியது.
     
    அபினந்தன் காயமடைந்த வீடியோ காட்சியை வெளியிட்ட பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், பாகிஸ்தான் கைது செய்துள்ள அபினந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.

    இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தொடர்பான வீடியோக்களை நீக்கவேண்டும் என யூ டியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #Abhinandhan #Youtube
    ×