search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roadside bomb"

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான்களின் கண்ணிவெடியில் சிக்கிய 8 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

    பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்நிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்துக்குட்பட்ட முக்கெர் மாவட்டத்தில் ராணுவத்தினரை கொல்வதற்காக சாலையோரத்தில் தலிபான் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் நேற்று சிக்கிய 8 குழந்தைகள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    காயமடைந்த மேலும் இரு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் இன்று சாலையோர குண்டுவெடித்ததில் பேருந்தில் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். #Roadsidebomb #Afghanbomb
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகரான காபுல் நோக்கி இன்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஃப்ரா மாகாணம், பலா பலுக் மாவட்டத்தின் வழியாக வந்தபோது தலிபான் பயங்கரவாதிகள் சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு திடீரென்று வெடித்து சிதறியது.



    இந்த தாக்குதலில் பேருந்தில் வந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகள் கடந்த 2014-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிய பின்னர் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நாட்டின் பல பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது.

    இந்த ஆண்டில் இதுவரை நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1692 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. #Roadsidebomb #Afghanbomb 
    ×