search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal weddingஇளவரசர் ஹாரி"

    5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெறும் இளவரசர் ஹாரி-மேகன் திருமண விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #Meghan Markle #PriyankaChopra #Princeharry
    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதி யின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் திருமணம் நடக்கிறது.

    திருமணத்தை யொட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச குடும்ப திருமணத்தை யொட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியை கடவுள் ஆசீர் வதிப்பாராக. அவர்கள் இருவரும் கடவுளின் அன்பால் நீடூடி வாழ வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.

    மணமகள் மேகன் மார்கலுக்கு இளவரசர் சார்லஸ் அணிவிக்க இருக்கும் திருமண மோதிரத்தில் 3 வைரகற்கள் பதிக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று போட்ஸ் வானாவில் வாங்கப்பட்டது. சமீபத்தில் இந்த ஜோடி விடுமுறையை கழிக்க அங்கு சென்றபோது வாங்கப்பட்டது. மற்ற 2 வைரகற்களும் ஹாரியின் தாயார் மறைந்த இளவரசி டயானாவுக்கு சொந்தமானது.

    திருமணத்தில் மணமகள் மேகன் மார்கலின் தந்தை தாமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய ஆபரேசன் நடந்தது. எனவே மேகனுடன் அவரது தாயார் டோரியா ராக் லேண்ட் தந்தை ஸ்தானத்தில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகன் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    இளவரசர் ஹாரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்கின்றனர். அதற்காக அவர்கள் அனைவரும் விண்ட் சோர் நகருக்கு வந்துள்ளனர்.

    அங்கு அரச குடும்பத்துக்கு சொந்தமான மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்கள் தவிர திருமணவிழாவில் பங்கேற்க 600 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 2,640 பொதுமக்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்குள்ள ஒரு மைதானத்தில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.



    இளவரசர் ஹாரி திருமண விழாவில் இந்தியர்கள் சார்பில் பங்கேற்க நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர் தவிர மும்பை குடிசை பகுதியை சேர்ந்த அர்ச்சனா அம்ரி (25), டெபோரா தாஸ் (31) ஆகிய 2 பெண்கள் பங்கேற்கிறார்கள். இவர்கள் சமூக சேவை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களுடன் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சுஹானி ஜலோடாவும் பங்கேற்கிறார்.

    திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய சாரட் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இது 19-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த வண்டியை விண்ட் சோர் நகரின் பழமைவாய்ந்த தெருக்களின் வழியாக 4 குதிரைகள் இழுத்து செல்கின்றன.

    கோலாகலமாக நடைபெறும் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு ரூ.5 கோடி செலவிடப்படுகிறது. திருமண நிகழ்ச்சியை பல் வேறு சர்வதேச டெலி வி‌ஷன்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. ஏற்கனவே ஹாரி-மேகன் காதலை மையமாக வைத்து அமெரிக்க டி.வி. சேனல் ஒன்று ‘எ ராயல் ரொமான்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு சினிமா படம் ஒளிபரப்பியது. அது ஒரு காமெடி படத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது. #Meghan Markle #PriyankaChopra #Princeharry
    ×