search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs 3 crore gold"

    கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வெளியே கடத்திச் செல்ல முயன்ற ஒப்பந்த பணியாளர் பிடிபட்டார். #10kggold #goldseized worth #Rs3croregold #Keralaairport
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் அனீஷ். விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக ஒரு பெரிய கைப்பையை இன்று அவர் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சந்தேகப்பட்ட பாதுகாப்பு படையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

    அவர்களை கண்டதும் கைப்பையை கீழே போட்டுவிட்டு அனீஷ் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற  பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து விரைந்துவந்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய கைப்பையை சோதனையிட்டபோது அதனுள்ளே சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து அனீஷை கைது செய்த அதிகாரிகள் பிடிபட்ட கடத்தல் தங்கம் யார் மூலமாக கொண்டு வரப்பட்டது? அதை பெற்றுக்கொள்ள காத்திருக்கும் நபர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #10kggold #goldseized worth #Rs3croregold #Keralaairport
    ×