என் மலர்
நீங்கள் தேடியது "Russia Apartment Collapse"
ரஷியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. #RussiaGasExplosion #RussiaApartmentCollapse
மாஸ்கோ:
ரஷியாவின் மாக்னிடோகோர்ஸ்க் நகரில் உள்ள பத்து மாடிகளை கொண்ட குடியிருப்பின் ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை எரிவாயு கசிவு ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த குடியிருப்பில் இருந்த 48 வீடுகள் இடிந்து விழுந்தன.

நேற்று மாலை வரை 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அங்கு வசித்தவர்களில் மேலும் 20 பேரை காணவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளதால் தேடுதல் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். அதன்பின்னர் மேலும் 16 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. #RussiaGasExplosion #RussiaApartmentCollapse

இதையடுத்து மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன. அப்பகுதியில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் மற்றும் குளிருக்கு இடையில் இருநாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.