search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sadhvi prachi"

    • கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.
    • இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

    கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது, என்றாலும் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. படத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


    சாத்வி பிராச்சி

    இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பெண் சாமியார் சாத்வி பிராச்சி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஜெய்பூரில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான தியேட்டரில் நின்றபடி பெண் சாமியார் சாத்வி பிராச்சி,மாற்று மதம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். இதனை வீடியோவில் பதிவு செய்த சிலர் அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் ராஜஸ்தான் போலீஸ் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். அதன்பேரில் ஜெய்பூர் போலீசார், பெண் சாமியார் சாத்வி பிராச்சி மீது சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விரைவில் துணைவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்ய வந்தேன் என பெண் துறவி சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார். #SadhviPrachi #RahulGandhi
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் அமைந்துள்ளது கோரக்நாத் கோவில். இந்த கோவிலுக்கு நேற்று இந்துத்துவா தலைவர் சாத்வி பிராச்சி வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அவர்களிடம் சாத்வி பிராச்சி பேசுகையில், நான் எப்போதும் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு சிறப்பு பிரார்த்தனைக்காக வந்துள்ளேன்.

    மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் பெறவில்லை. எனவே, ராகுலுக்கு விரைவில் நல்ல துணைவியாவது கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கவே இப்போது வந்துள்ளேன் என கூறினார்.



    காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு துணைவி கிடைக்க வேண்டும் என பெண் துறவி வேண்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து, உ.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங் கூறுகையில், பிரபலமானவர்களை பற்றி கருத்து கூறுவது தற்போது இது டிரெண்டாக உருவாகி வருகிறது.

    சாத்வி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார். இது அருவருக்கத்தக்க செயல் என தெரிவித்தார். #SadhviPrachi #RahulGandhi
    ×